புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
தயானந்த குணவர்தனவின் ~~நரிபேனா'' நாடகத்தில் மஹிந்த பெண் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்தார்

ஏழைப் பிள்ளையின் நண்பன்-16

தயானந்த குணவர்தனவின் ~~நரிபேனா'' நாடகத்தில் மஹிந்த பெண் கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறுவனாக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்களை தொகுத்து தெனகம சிறிவர்தன என்ற நூலாசிரியர் எழுதிய மூலப்பிரதியை செல்வி முதுபத்மகுமார ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார், இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கத்தை ஏழைப்பிள்ளையின் நண்பன் என்ற தலைப்பில் எஸ்.தில்லைநாதன் மொழிபெயர்த்துள்ளார். இந்த கதை வாராவாரம் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவரும்.

நாள் மஹிந்த சக மாணவனான டிக்ஷன் தெலவுடன் பாடசாலை ஆசிரியரான தயானந்த குணவர்தனவை சந்தித்தார். “சேர், நான் எங்கள் பாடசாலையின் சக மாணவர்களை ஒன்று சேர்த்து ஒரு நாடகத்தைத் தயாரிப்போமா” என்று மஹிந்த கேட்டார்.

“என்னிடம் ஒரு நல்ல கதை வசனம் இருக்கிறது. நாம் லயனல் அல்கமவின் உதவியை நாடி இதனை சிறப்பாகத் தயாரிக்கலாம். ஆனால், இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன என்று தயானந்த குணவர்தன கூறிய போது, “அது என்ன சேர்” என்று மஹிந்த கேட்டார்.

எங்களிடம் பண வசதி இல்லை. அதனையும் நாம் ஒரு வகையில் தீர்த்துக் கொள்ளலாம். அடுத்த பிரச்சினை தான் சற்று கடினமானது. ஆண் மாணவர்களைக் கொண்ட ஒரு பாடசாலையில் ஒரு பெண் நடிகையை எவ்விதம் மேடையேற்றுவதுதான் இன்னுமொன்று என தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

“இப்போது அது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அருகிலுள்ள மாணவியரை இந்த நாடகத்தில் நடிக்கச் செய்வது முடியாத காரியமல்ல. மாணவிகள் இவ்விதம் நடிப்பதற்கு எவரும் அனுமதி அளிப்பது பிரச்சினையாக இருக்கும்” என்று ஆசிரியர் கூறினார்.

இது குறித்து மஹிந்த சில விநாடிகள் சிந்தித்த பின் ஒரு தீர்வை முன்வைத்தார். “சேர், என்னால் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்” என்று மஹிந்த கூறிய போது, ஆசிரியர் சரி நாம் நாடகத்தைத் தயாரிப்பதில் கவனத்தைச் செலுத்துவோம் என்று ஆசிரியர் கூறினார்.

“நரி பேனா” என்ற நரி மருமகனான கதையை தயானந்த குணவர்தன மேடையேற்றுவதென்ற செய்தி பரவ ஆரம்பித்தது. சிறுவன் மஹிந்த இதில் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். இந்த செய்தி மஹிந்தவின் தாயாரின் காதுகளில் எட்டிவிட்டது.

“மஹிந்த நான் கேட்ட தகவல் உண்மையா? நீ, இந்த நாடகத்தில் விவசாயின் மகளின் கதபாத்திரத்தில் நடிக்கப் போகிறாயா” என்று தாயார் கேட்டார். எங்கள் பாடசாலையில் மாணவர்கள் மாத்திரம் இருப்பதால் செய்வதறியாது நான் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறேன் என்று மஹிந்த கூறிய போது, தாயார் மகனே, நீ ஆண்களின் கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டுமே ஒழிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாதென்றார். இவ்வேளையில் ஆசிரியர் தயானந்த குணசேகர கொழும்பில் உள்ள மகளிர் பாடசாலையில் இருந்து சில மாணவிகளை நாடகத்தில் நடிக்க வைப்பதற்கான ஒழுங்குகளை செய்து முடித்தார்.

கோத்தமி மகளிர் பாடசாலையின் மாணவியான சிறியானி அமரசேன இந்த நாடகத்தில் நடிக்க தெரிவுசெய்யப்பட்டார்.

* * *

தயானந்த குணவர்தனவின் “நரி பேனா” நாடகம் தேர்ஸ்டன் கல்லூரி மண்டபத்தில் மேடையேற்றுவதற்கான திகதியும் குறிக்கப்பட்டது. நாடகத்திற்கான ஒழுங்குகளை மஹிந்தவும் அவரது நண்பர்களும் செய்தார்கள். நாடகத்திற்கான விளம்பர சுவரொட்டிகளை ஒட்டும் பணி மஹிந்தவுக்கும் வேறு சில மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.

மஹிந்த சுவரொட்டிகளுடன் தன் நண்பன் சந்திரா பெர்னாண்டுவை ஏற்றிக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் புறப்பட்டார். மஹிந்தவின் நண்பர்களான கங்கந்தவும், டிக்ஷன் டெலவும் பசையை ஒரு வாளியில் எடுத்துக் கொண்டு இன்னுமொரு துவிச்சக்கர வண்டியில் சென்றார்கள். முதலில் மஹிந்தவின் சைக்கிள் சென்றது. வீதியின் இரு மருங்கிலும் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த போது அவர்கள் சூரியன் அஸ்தமித்துவிட்டதை அவதானிக்கவில்லை. அப்போது வீதியில் ரோந்து புரிந்து கொண்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இந்த சிறுவர்கள் இரவில் துவிச்சக்கர வண்டிகளில் செல்வதை அவதானித்து “நிறுத்துங்கள்” என்று சத்தமிட்டனர்.

மஹிந்தவுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த டிக்ஷன் டெலவும், கங்கந்தவும் பொலிஸாரிடம் பிடிபடாமல் தப்பிச் சென்றனர். முன்னால் சென்ற மஹிந்தவும் சந்திரா பெர்னாண்டுவும் பொலிஸாரிடம் அகப்பட்டனர்.

இரவு நேரத்தில் விளக்கும் இன்றி, ஒரு சைக்கிளில் இரட்டையர் போவது சட்டப்படி தடை செய்யப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா? வாருங்கள் எங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு என்று ஒரு பொலிஸ்காரர் இவ்விரு மாணவர்களையும் அதட்டினார்கள். இவ்விருவரையும் அவர்கள் கருவாக்காட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தங்கள் இருவரையும் பார்த்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கெட்ட வார்த்தைகளால் பேசி அவமதித்ததை பார்த்த மஹிந்த ஆத்திரமடைந்தார்.

“நாம் சட்டத்திற்கு முரணாக ஏதாவது செய்திருந்தால் எங்களுக்கு எதிராக வழக்கு தொடருங்கள். இவ்விதம் தரக்குறைவான வார்த்தைகளால் ஏசாதீர்கள்” என்று மஹிந்த ஆத்திரத்துடன் கூறினார். அவ்விதம் சொல்லியும் அவ்விரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இவ்விருவருக்கும் ஏசுவதை நிறுத்தவில்லை. அப்போது திடீரென்று அங்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மஹிந்தவை அடையாளம் கண்டுவிட்டார். அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றவர்களை பார்த்து பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரின் மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

அத்துடன் மஹிந்தவையும் நண்பனையும் ஏசிய அந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மெளனம் சாதித்தார்கள். ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மஹிந்தவிடம் சென்று “நீங்கள் ஏன் உங்கள் அப்பாவின் பெயரைச் சொல்லவில்லை” என்று கேட்டார். நான் ஏன் எனது அப்பாவின் பெயரைத் தெரிவிக்க வேண்டும். நான் தானே இந்தக் குற்றத்தை செய்தேன் என்று மஹிந்த கூறினார்.

“நீங்கள் உங்கள் அப்பாவின் பெயரைச் சொல்லியிருந்தால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. வீதியில் வைத்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக அனுமதித்திருப்பார்கள்” என்று கூறினார். “என் அப்பாவின் பெயரை சொன்னவுடன் பொலிஸார் தங்கள் விதிமுறைகளை மாற்றிக் கொண்டால் அந்தச் சட்டங்கள் அவசியமில்லாமல் போய்விடும்” என்று மஹிந்த சொன்னவுடன் அந்த பொலிஸ்காரர்கள் மெளனம் சாதித்தார்கள்.

* * *

“நரிபேனா” நாடகத்தின் முதல் நாள் காட்சியை பார்ப்பதற்கு விசேட விருந்தினர்கள் வந்திருந்தார்கள். முன் வரிசையில் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீன் மொஹமட், கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.குணசேகர ஆகியோர் அமர்ந்திருந்தனர். கல்வி அமைச்சர் பதியுதீன் மொஹமட் மண்டபத்தை சற்று அவதானமாக பார்த்துக் கொண்டிருந்த போது நாலாவது வரிசையில் பிரதி சபாநாயகர் டி.ஏ.ராஜபக்ஷ அமர்ந்திருப்பதை கண்டார். அவர் உரத்த குரலில் “டீ.ஏ. நீங்கள் ஏன் அங்கு அமர்ந்திருக்கிaர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்” என்று அழைத்தார். அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அனைவரும் ராஜபக்ஷவை முன்னால் வருமாறு அழைத்தனர். இதையடுத்து பாடசாலை அதிபர் திரு.ராஜபக்ஷவுக்கு அருகில் சென்று என்னை மன்னித்துவிடுங்கள் சேர். முன் வரிசையில் ஓர் ஆசனம் இருக்கிறதென்று அவரை அழைத்தார். அப்போது திடீரென்று சிரித்த டீ.ஏ. ராஜபக்ஷ எனது மகன் 15 ரூபா டிக்கட் ஒன்றை எனக்கு விற்பனை செய்தான். நான் இப்போது அமர்ந்திருப்பது 15 ரூபா ஆசன வரிசையில் என்று தெரிவித்து நான் இங்கேயே அமர்ந்திருக்கிறேன் என்று கூறினார்.

அவருக்கு பின்னால் 10 ரூபா டிக்கட் ஆசன வரிசையில் நிவித்திகல பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டென்ல் மொல்லிகொட அமர்ந்திருந்தார். நாம் எங்களுடைய சரியான ஆசனத்தில் தான் அமர்ந்திருக்கிறோம் என்று கூறிய டி.ஏ. ராஜபக்ஷ அதே ஆசனத்தில் இருந்து நாடகத்தை கண்டு களித்தார்.

எவ்விதம் ஆயினும் பிரதி சபாநாயகர் டி.ஏ.ராஜபக்ஷ 15 ரூபா ஆசனவரிசையில் நரிபேனா நாடகத்தை கண்டுகளித்தார். அதையடுத்து பாடசாலை அதிபர் மஹிந்தவைப் பார்த்து மஹிந்த ஒரு விசேட விருந்தினருக்கு டிக்கட்டை ஏன் விற்பனை செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு மஹிந்த பதிலளிக்கவில்லை.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.