புத் 66 இல. 04

விஜய வருடம் தை மாதம் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. அவ்வல் பிறை 24

SUNDAY JANUARY 26 2014

 

 
சுதந்திர இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியே முதலில் செயற்பட்டது

சுதந்திர இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியே முதலில் செயற்பட்டது

(சென்றவாரத் தொடர்)

,தன் மூலம் சுமார் 10இலட்சம் இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை அன்றைய பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்க பறித்தார். 1947ம் ஆண்டின் பாராளு மன்றத்தில் ஒக்டோபர் 14ம் திகதியன்று பாராளுமன்றம் கூடிய போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் மொலமுரே சபாநாய கராக தெரிவு செய்யப்பட்டார். அன்றைய பாராளுமன்றத்தில் சபை முதல்வராக ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க இருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் தொண்டமான் இலங்கை இந்திய காங்கிரஸின் சார்பில் தனது கன்னி உரையை பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். அன்று தொண்டமான் பாராளுமன்றத்தில் அதிகமாக பேசமாட்டார். ஆயினும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாராளுமன்றத்தில் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் கஷ்டங்களை எடுத்துரைப்பார்.

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் ஜே.ஆர்.மோத்தா என்பவர் மஸ்கெலிய தொகுதியில் இருந்தும் கே.ராஜலிங்கம் நாவலப்பிட்டியில் இருந்தும் பி.இராமானுஜம் அளுத்நுவர தொகுதியில் இருந்தும் கே.குமாரவேல் கொட்டகலை தொகுயில் இருந்தும், எஸ்.எம். சுப்பையா பதுளை தொகுயில் இருந்தும், சி.வி.வேலுப்பிள்ளை தலவாக்கலை தொகுயில் இருந்தும், தொண்டமான் நுவரெலியா தொகுயில் இருந்தும் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்கள். 8 வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் போட்டியில் ஈடுபடுத்திய போதும் ஹப்புத்தளை தொகுதியில் இலங்கை இந்திய காங்கிரஸ் தோல்வியடைந்தது.

இலங்கை இந்திய காங்கிரஸின் வேட்பாளர் ஆர்.ஏ.நடேசனுக்கு எதிராக மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டதனால் தமிழ் வாக்குகள் பிளவுபட்டதனால் ஜே.ஏ.ரம்புக்பொத்த ஹப்புத்தளை தொகுதியில் 371 என்ற ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். இராமானுஜம் என்ற தனது கட்சியின் வேட்பாளர் வெற்றியடைந்தது பற்றி விளக்கமளித்த தொண்டமான், தனக்கு இலங்கை இந்திய காங்கிரஸ் ஒரு தமிழ் தொகுதியில் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்காத போதிலும் தான் சாஸ்திரம் பார்ப்பதில் விற்பன்னராக இருப்பதனால் தனக்கு இந்தத் தேர்தலில் வெற்றி கிட்டும் என்று இராமானுஜம் தனக்கு ஏற்கனவே அறிவித்ததாக தொண்டமான் தெரிவித்தார். இதனால், இந்தியத் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் தமக்கு வெற்றி நிச்சயம் என்றும் தொண்டமான் கருதினார்.

1947 செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய தேசியக்கட்சி முதலாவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்ததை அடுத்து அன்றைய ஆளுநர் அவ்வாண்டு செப்டம்பர் 24ம் திகதியன்று டி.எஸ்.சேனநாயக்காவை பிரதம மந்திரியாக நியமித்து அவரது அமைச்சரவையை நியமிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் டி.எஸ்.சேனநாயக்க தனது அமைச்சரவையை அறிவித்தார். இந்த அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். சி.சுந்தரலிங்கம் வர்த்தக வணிகத்துறை அமைச்சராகவும் சித்தம்பலம், தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே முஸ்லிம் டி.பி.ஜாயா அவர்களாகும். தொழில் சமூக சேவை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் இரண்டு முஸ்லிம்களான எம்.எஸ்.காரியப்பர், எம்.எஸ்.இஸ்மாயில் மற்றும் ஒரு தமிழரான வீ. நல்லையா ஆகியோர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

இவ்விதமே இலங்கையின் முதலாவது அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு சிறுபான்மையினருக்கு அங்கத்துவம் கொடுக்கப்பட்டது. அமைச்சரவையில் நியமிக்கப்பட்டு சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஒக்டோபர் 14ம் திகதியன்று பாராளுமன்றம் கூடிய போது ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த மொலமுரே சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு 58 வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்து சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட நிசங்கவுக்கு 41 வாக்குகளே கிடைத்தன.

ஜனாப்.ஏ.அkஸ் ஆச்சர்யமூட்டக்கூடிய வகையில் இலங்கை இந்திய காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவில்லை. இதுபற்றி ஜனாப் அkஸிடம் விளக்கம் கேட்ட போது தன்னை ஆதரிக்கும் முழுநேர தொழிற்சங்கவாதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப உதவியளிக்கும் முகமாகவே போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.

ஆரம்பத்தில் ஜனாப் அkஸ் பதுளை தொகுதியில் போட்டியிடுவதற்கு தெரிவானார். ஆயினும் அவர் எஸ்.எம்.சுப்பையாவிடம் அத்தொகுதியை விட்டுக் கொடுத்தார். இதே அடிப்படையிலேயே சி.வி.வேலுப்பிள்ளையை தலவாக்கலைக்கு நியமிப்பதற்கு உதவி செய்தார். இவ்விதம் பரோபகார மனம் கொண்ட அkஸ¤க்கு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்கவில்லை. திரு.ஜீ.ஆர்.மோத்தா திடீரென்று மரணமடைந்ததை அடுத்து நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் ஜனாப் அkஸ் மஸ்கெலியாவின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

திரு.தொண்டமான் 1931ம் ஆண்டுத் தேர்தலிலும் 1936ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிடுவதில் அந்தளவுக்கு அக்கறை காண்பிக்கவில்லை. இதனால், அன்றைய சட்டமன்றத்திற்கு இரண்டு இந்தியத் தலைவர்கள் பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்து தெரிவானார்கள்.

1947ம் ஆண்டுத் தேர்தலில் இலங்கை இந்திய காங்கிரஸ் பாராளுமன்றத்தின் 7 தொகுதிகளில் வெற்றியீட்டிய போதிலும் 14 முதல் 15 தொகுதிகளில் இந்திய வாக்காளர்களின் உதவியுடன் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்கை வகித்தது. இவ்விதம் இந்திய வாக்குகளின் மூலம் ஐக்கிய தேசியக்கட்சியை ஆட்டிப்படைக்கும் பலம் இலங்கை இந்திய காங்கிரஸிற்கு இருக்கிறது என்பதை காண்பித்தமையால் டி.எஸ்.சேனநாயக்க இலங்கை இந்திய காங்கிரஸை தண்டிக்கும் சில செயற்பாடுகளை எடுப்பார் என்று அன்றைய சந்தர்ப்பத்தில் தான் சிறிதேனும் எதிர்பார்க்கவில்லை என்று தொண்டமான் கூறினார்.

1947ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் முடிவுகளை ஒரு காரணமாக வைத்து பிரதம மந்திரி டி.எஸ்.சேனநாயக்க மலையக இந்தியத் தமிழ் தொழிலாளர்களின் வாக்குரிமையை இரத்து செய்வதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்தார். 1946ம் ஆண்டில் இடம்பெற்ற குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத்தின்படி 6இலட்சத்து 65 ஆயிரத்து 883 இந்திய தமிழர்கள் தோட்டங்களில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் குழந்தைகள் மற்றும் ஏனைய குடும்ப அங்கத்தவர்களுடன் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

அன்று இந்தியத் தமிழர்கள் என்று இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய இந்திய வம்சாவளியினரை இணைத்து மதிப்பீடு செய்யப்பட்ட போது அது பத்து இலட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.

இந்த வரலாற்று நிகழ்வுகளை நாம் அவதானமாக ஆராய்ந்து பார்க்கும் போது சுதந்திர இலங்கையில் சிறுபான்மையோருக்கு எதிரான இனத்துவேசத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சியே வித்திட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

இத்துடன் மலையக இந்திய வம்சாவளி தமிழர்களின் வரலாற்றுக் கதையை முடித்து கொள்கிறோம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் பல தகவல்களுடன் இந்தக் கதையை எழுதுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.