விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
மத்திய அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு பச்சைக்கொடி

பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, முரண்பாடான விடயங்களை பேசித் தீர்த்தல்:

TNA பச்சைக்கொடி

ஜனாதிபதியுடனான முதலமைச்சரது சந்திப்பின் பின் பாரிய திருப்பம்

மத்திய அரசாங்கத்துடன் இணக் கம் காணப்படும் விடயங்களில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு களுடன் இணைந்து செயற்பட வடமாகாண சபை முன்வந்துள் ளதாக நம்பகரமாத் தெரிய வருகிறது. முரண்பாடுகள் ஏற்படின் அவற்றைப் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்த்து வைப் பதுடன் பிரச்சினைகளைப் பெரிது படுத்தாதிருக்கவும் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதற்காக இரு தரப்பினரும் பரஸ்பரம் சில விட்டுக் கொடுப்புக்களை நல் லெண்ண அடிப்படையில் விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வட மாகாண சபையின் முதல மைச்சர்சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து உரையாடியதன் பின்னர் வட மாகாண சபையின் செயற்பாடுகளில் ஒருவிதமான நெகிழ்வுப் போக்கைக் காணக்கூடியதாகவுள்ளது. முதலமைச்சரின் சந்திப்பைத் தொடர்ந்து தமிழகம் சென்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடுதிரும்பியதும் அடுத்த வாரமளவில் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடவுள்ளார். இதனைக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உறுதி செய்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் இந்த மனமாற்றம் குறித்து வடபகுதி மக்களும், புத்தஜீவிகளும் தமது திருப்தியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்பவோ எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமாகவே மாகாண சபை நிர்வாகத்தைத் திறம்பட நடத்த முடியும் என்பதே உண்மை எனவும் புத்திஜீவிகள் தெரிவித்தனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]