புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
அரசியல் சாணக்கியம் மிக்க டி.எஸ்.சேனநாயக்க

அரசியல் சாணக்கியம் மிக்க டி.எஸ்.சேனநாயக்க

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜhவுரிமையை ரத்து செய்தார்

(சென்ற வாரத் தொடர்)

,லங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரின் வாக்குரிமையை பறிக்க பிரதமர் டிஸ்.சேனநாயக்கவின் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் 1949ல் இந்திய பாகிஸ்தான் குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்த போது அதற்கு ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் துணைபோன காரணத்தினால் அக்கட்சியின் காங்கேசன் துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வன்னிசிங்கம், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவபாலன் ஆகியோரும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இருந்து வெளியேறினர். அதற்குப் பின்னர் அவர்கள் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சியை ஸ்தாபிக்க தீர்மானித்தனர். 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி கொழும்பு மருதானையில் உள்ள அரசினர் எழுதுவினைஞர் கட்டிடத்தில் ஆங்கிலத்தில் பெடரல் பார்ட்டி என்றழைக்கப்பட்ட தமிழரசுக்கட்சி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

1951ம் ஆண்டில் தமிழரசுக்கட்சியின் முதலாவது தேசிய மாநாடு திருகோணமலையில் ஏப்ரல் மாதம் 12ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை நடைபெற்றது. அதன் தலைமை உரையில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், பல்லின மக்கள் வாழும் நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப் படுகின்ற போதிலும் டி.ஸ்.சேனநாயக்காவின் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் 7 இலட்சம் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையை பறித்ததன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் வாக்குப் பலத்தை கிட்டத்தட்ட 50 சதவீதத்தினால் குறைத்துவிட்டதென்று கண்டனம் தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் மலையக மக்களின் உதயசூரியனைப் போன்று செளமியமூர்த்தி தொண்டமான் என்ற ஒப்பற்ற தலைவர் அம்மக்களின் துயரத்தை துடைப்பதற்காக தோன்றினார்.

1940ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் தொழிற்சங்கவாதியாக இருந்து பாராளுமன்றத்திற்கு நியமனம் பெற்ற பின்னர் ஓர் அரசியல்வாதியாகவும் மலையக இந்தியவம்சாவளி மக்களுக்காக மட்டுமன்றி இந்நாட்டில் வாழும் சகல தமிழ் மக்களுக்காகவும் தன்னலமற்ற சேவையைப் புரிந்தார்.

தென்னிந்தியாவில் றாம்நாள் மாவட்டத்தில் 1913ம் ஆண்டில் தொண்டமான் பிறந்தார். மற்ற இந்தியத் தமிழர்கள் வந்தது போன்று தொண்டமான் அவர்களின் குடும்பமும் இலங்கைக்கு வந்தது. 1924ம் ஆண்டில் 13 வயதில் அவர் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்தார். இவரது தந்தை 1870ம் ஆண்டளவில் இலங்கைக்கு வருகை தந்து கோப்பித் தோட்டமொன்றில் 13 சதம் நாள் சம்பளத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து அவரது கடும் உழைப்பினால் நுவரெலியாவுக்கு அருகில் உள்ள 40 ஏக்கர் வெவன்டன் தோட்டத்தின் உரிமையாளராகினார்.

சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்தத் தேயிலைத் தோட்டத்திற்கு உரிமையாளராக வந்த முதலாவது கறுப்பு இனத்தவரும் தொண்டமானின் தந்தை கறுப்பையா ஆவார். அன்று பிரிட்டிஷ் இராஜ்யத்தின் கீழ் கீழைத்தேயர்கள் பெருந்தோட்ட முதலாளிமார்களாவதற்கு உரிமை மறுக்கப்பட்டது. இந்த பிரிட்டிஷ் தோட்ட துறைமார் தோட்டங்களில் பணிபுரிவோரை தொழிலாளிகள் என்று அழைப்பதற்கு பதில் கூலிகள் என்று அவமானமாக அழைத்தார்கள்.

படிப்படியாக கூலிகள் என்று அழைக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுத்த போராட்டங்களினால் சிவில் உரிமைகளை பெறக்கூடியதாக இருந்தது. தொண்டமான் சுமார் 50 ஆண்டுகாலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக விளங்கினார்.

தொண்டமான் அவர்கள் தனது அரசியல் கருத்துக்களை மிகவும் அழகாக கிண்டல் செய்யும் பாணியில் தெரிவிப்பதில் வல்லவராக விளங்கினார். 1983ம் ஆண்டு இனக்கலவரம் ஜூலை மாதம் 25ம் திகதியன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது. அதற்கு முதல் தினம் 24ம் திகதியன்று ஒரு ஞாயிற்றுக் கிழமையாகவும், போயா தினமாகவும் இருந்தது. இனக்கலவரம் ஏற்பட்டு ஓரிரு தினங்களுக்குப் பின்னர் சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் திரு.தொண்டமான் அவர்களிடம் இனக்கலவரம் பற்றிய ஒரு பேட்டி கண்டபோது அவர் ஆஷ்யமாக ஷிunனீay ஷிil ணிonனீay kill கிண்டலாக ஞாயிற்றுக்கிழமை போயா தினத்தன்று சில் அனுஷ்டானத்தில் ஈடுபட்டார்கள். திங்கட்கிழமையன்று மக்களை கொன்றார்கள் என்று கூறியதன் மூலம் இனக்கலவரம் எவ்வளவு பாரதூரமானது என்பதை விளக்கிக் கூறினார். 1946ம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் போது மலையகத் தோட்டங்களில் குறைந்தபட்சம் 6 இலட்சத்து 65ஆயிரத்து 853 இந்தியத் தமிழர்கள் பணிபுரிந்தார்கள் என்றும் அவர்களின் பிள்ளைகள், குடும்ப உறுப்பினர்கள் இந்தக் கணக்கெடுப்பில்

 சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்றும் அறிவிக்கப்படுகிறது. இதே வேளை நகரப்புறங்களிலும் மலையகத் தோட்டங்களுக்கு அப்பாலும் இந்தியத் தமிழர்கள் சுமார் 10இலட்சத்திற்கும் அதிகமானோர் இருந்தார்கள். இவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தவர்களாவர். 1920ம் ஆண்டிலேயே அன்று சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையில் இந்தியத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கொடுக்கப்பட்டால் அது மலையகத்தில் உள்ள சிங்களவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய சட்டசபையில் 1928ம் ஆண்டு ஒக்டோபர் 5ம் திகதியன்று டி.எஸ்.சேனநாயக்கா மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை கொடுப்பது பற்றி கேள்வி எழுப்பினார் என்று இலங்கையின் முதலாவது பிரதமமந்திரி டொன் ஸ்டீபன் சேனநாயக்கா என்ற புத்தகத்தின் ஆசிரியர் எச்.ஏ.ஜே. ஹ¥லுகல்ல குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து 1928ம் ஆண்டில் இருந்தே மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிராஜாவுரிமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்ற கொள்கையை டி.எஸ்.சேனநாயக்கா ஆரம்பம் முதல் கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1948ம் ஆண்டில் 20 வருடங்களுக்கு பின்னர் டி.எஸ்.சேனநாயக்கா இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைவரதும் பிரஜாவுரிமையை பறித்துவிடுவதற்கு தனது அரசியல் சானக்கியத்தை பயன்படுத்தி வெற்றிகண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1931ம் ஆண்டு முதல் 1947 வரையில் மலையக இந்தியவம்சாவளி மக்கள் வாக்குரிமையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. முதலில் டொனமூர் அறிக்கையை டி.எஸ்.சேனநாயக்காவும் அவருடைய சகாக்களும் எதிர்த்த போதிலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதற்கு சில திருத்தங்களைக் கொண்டு வந்து பிரஜாவுரிமை, பிராந்திய பேரவைகள் போன்றவற்றில் ஓர் இணக்கப்பாட்டை கொண்டு வந்து அந்த எதிர்ப்பை சமாளித்தார்கள்.

டி.எஸ்.சேனநாயக்கா மற்றவர்களைப் போலல்லாமல் குள்ளத்தனமாக சிந்தித்து தான் நினைத்ததை செயற்படுத்தும் சாணக்கியம் மிக்க மனிதரென்று நூலாசிரியர் எச்.ஏ.ஜே. ஹ¥லகல்ல தெரிவித்தார். இந்த உடன்பாட்டுக்கு டி.பி.ஜெயதிலக்கவுடன் இணைந்து இணக்கம் தெரிவித்த டி.எஸ்.சேனநாயக்கா அரை இறாத்தல் பாண், பாண் இல்லாமல் தவிப்பதை விட நல்லதென்று தெரிவித்துள்ளார்.

1947ம் ஆண்டு தேர்தலில் மலையக இந்தியவம்சாவளி தமிழர்களின் வாக்குரிமை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1931, 1936லும் இடம்பெற்றதேர்தல்களில் 50 ஆசனங்களில் இரண்டு இந்தியத் தமிழர்களே தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தகக்கது.

ஆயினும், 1947ம் ஆண்டில் இந்தியத் தமிழர்களின் இலங்கை, இந்திய காங்கிரஸ் 7 ஆசனங்களில் வெற்றிபெற்றதுடன் மேலும் பல ஆசனங்களில் தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளர்கள் வெற்றியீட்டுவதற்கு தங்கள் செல்வாக்கை வெற்றிகரமாக பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.