விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03
SUNDAY JANUARY 05 2014

Print

 
வடமாகாண விவசாய அமைச்சு நடத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி 2014

காளைகளை எவ்விதத்திலும் துன்புறுத்தலாகாது என்பது நிபந்தனை:

வடமாகாண விவசாய அமைச்சு நடத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி 2014

வடமாகாண விவசாய அமைச்சு நடத்தும் மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று நடத்தவுள்ளது . பு+மிப்பந்தெங்கும் பரந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவராலும் சமய வேறு பாடுகள் கடந்து கொண்டாடப்படும் தமிழ்ப் பண்பாட்டுப் பெருவிழாவாகத் தைப்பொங்கல் விழா தொன்றுதொட்டு இடம்பெற்று வருகிறது . உழவுத் தொழிலில் நல்ல விளைச்சலைக் கொடுத்தமைக்காக இயற்கைக்கும் , உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்பட்டு வரும் இத் தைத்திருநாளையொட்டித் தமிழர் களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன் றான மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் இடம்பெறுவது வழக்கம் .

போர்க்காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண சு+ழ்நிலை காரணமாக இந்த பாரம்பரிய விளையாட்டுக்குப் போதிய முக் கியத்துவம் தரப்படவில்லை. தற்போது, வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பா சனம் மற்றும் சுற்றுச்சு+ழல் அமைச்சு எதிர் வரும் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது .

அதன்படி நான்கு பிரிவுகளாக நடைபெறவுள்ள இந்த மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி மூளாய் பொன்னாலைச் சவாரித் திடலில் தைப்பொங்கல் நாளான எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது. காளைகளை எவ்விதத்திலும் துன்புறுத்தலாகாது என்ற நிபந்தனையுடன் நடத்தப்படவுள்ள இப்போட்டிக்கான விண்ணப்ப முடிவு இம்மாதம் 10 ஆம் திகதி ஆகும்.

அதன்படி போட்டியில் பங்குபற்ற விரும்பு பவர்கள் விண்ணப்பப் படிவங்களை 295 , கண்டி வீதி , யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் அலுவலகத்தில் பெற்றுக் கொள்வதோடு , போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை 0778449739 என்ற தொலைபேசி இலக் கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள் ளலாம். மேலும் இம்மாபெரும் மாட்டுவண்டிச் சவாரியில் வெற்றிபெறும் போட்டியாளர் களுக்கான பரிசுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள உழவர் பெருவிழாவின்போது வழங்கப்படும் என்றும் கோரப் பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]