புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
பிரிவுபசார விழா மேடையில் பிரிந்த கிராம அதிகாரியின் உயிர்

பிரிவுபசார விழா மேடையில் பிரிந்த கிராம அதிகாரியின் உயிர்

கடமையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி பிரதேச செயலகத்தால் நடத்தப்பட்ட பிரிவுபசார விழா வில் விழா நாயக ரான கிராம அலுவலர் திடீ ரென ஏற்பட்ட மாரடைப்பி னால் உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் சண்டிலிப் பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. சண்டிலிப் பாய், கல்வளையைச் சேர்ந்த இராசையா நித்தியானந்தன் (வயது 60) என்ற கிராம அலுவலரே உயிரிழந்தவர் ஆவார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஆண்டு நிறைவு நிகழ்வும் சண்டிலிப்பாய் வடக்கு (Nஜ/141) கிராம சேவகர் இராசையா நித்தியானந்தனின் பிரிவு உபசார நிகழ்வும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விழா நாயகரான ஒய்வுபெறும் கிராம அலுவலர் இராசையா நித்தியானந்தனின் பிரிவுபசார நிகழ்வு இடம்பெற்றபோது அவர் உரை நிகழ்த்த அழைக் கப்பட்டார். அவர் அவ்வேளை தாம் கடமையில் இருந்து ஒய்வு பெறவிரும்பவில்லை எனத் தனது உரையில் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவ்வாறான நிலையிலேயே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அங்கு சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப் பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்து வர்கள் உறுதிப்படுத்தினர். கடந்த 33 வருடங்களாக கிராம சேவகராகக் கடமையாற்றிய இவர் தனது கட மைக்கு அப்பால் நலிவடைந்துள்ள மக்களுக்கான வாழ் வாதார உதவிகளைத் தனிப்பட்ட ரீதியில் வெளிநாட்டில் உள்ள தமிழர்களிடம் இருந்து பெற்று வழங்கி வந்த வராவார். தன்னுடைய முயற்சியால் வாழ்வாதார உதவிகளைப் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். இந்தச் சம்பவத்தை அடுத்து சண்டிலிப்பாய் பகுதி பெரும் சோகமயமாகக் காட்சி அளித்ததுடன் இந்தப் பிரிவுபசார நிகழ்வில் கலந்துகொண்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.