சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22
SUNDAY OCTOBER 06 2013

Print

 
மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மாமனிதனாம்

மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மாமனிதனாம்

வடமாகாண சபையின் ஆரம்பமே சிறந்த நிர்வாக ஆளுமைக்கான நல்ல சகுனமல்ல

TNA யின் செயற்பாடு குறித்து அமைச்சர் பீரிஸ் ஐ.நா.வில் முறைப்பாடு

மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவனை மாமனிதனாக புகழ் உச்சியில் அமர்த்துவதற்கு வடமாகாண சபையின் நிர்வாகத்தின் ஆரம்பத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முயற்சி சிறந்த ஆளுமைக்கு நல்ல சகுனமல்ல என்று வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலிசனிடம் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபையுடன் இணைந்து மக்கள் சேவையை சிறப்பாக நிறைவேற் றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் ஜான் எலிசனிடம் உறுதியளித்துள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பேரவையின்

தலைமையகத்தில் ஐக்கிய நாடுகள் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலிசனையும், அரசியல் விவகார உதவி செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்மெனட்டையும் தனித்தனியாக சந்தித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ் ஞாபனத்தில் சில உணர்வுபூர்வமான அரசியல் பிரச்சினைகள் இணைக்கப்பட்டி ருந்தமை கவலைக்குரிய விடயமென்று சுட்டிக்காட்டினார். இன்று இத்தகைய பிரச்சினைகளை பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்த உள்ளோம் என்றும் கூறினார். 24 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடத்தப்பட்ட வடமாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சுட்டிக்காட்டியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அரசாங்கம் வடமாகாணத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையுடன் இணைந்து மக்கள் சேவையை செய்வதற்கு தயாராக இருக்கிறதென்று கூறினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]