சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22
SUNDAY OCTOBER 06 2013

Print

 
கிழக்கிலிருந்து பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பேன்

கிழக்கிலிருந்து பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பேன்

அதுவே எனது இலக்கு என்கிறார் ஹாபிஸ் நசீர்

கிழக்கு மாகாணம் அனைத்து வளங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினை பயன்படுத்தினால் அனைவருக்கும் இங்கு தொழில் வாய்ப்பு இருக்கின்றது. இங்குள்ள வளங்களை பயன்படுத்தி தொழில்களில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் வராது. எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வதை முற்றாக தடுப்பதற்காக மாற்று தொழில் நடவடிக்கைகளை நாம் இந்த மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் இரண்டு கிராமங்களை தெரிவு செய்து இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்குள் அந்த பிரதேசத்திலிருந்து எந்தவொரு பெண்ணும் பணிப் பெண்ணாக வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்ற நிலையை உருவாக்குவதே எனது இலக்காகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]