சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22
SUNDAY OCTOBER 06 2013

Print

 
கூட்டமைப்பின் முடிவிற்கு தமிழ் மக்கள் வரவேற்பு

30 அல்லது குறைந்தது 4 வருடங்களுக்கு முன் பேசியிருந்தால் பல உயிர்கள் தப்பியிருக்கும்

கூட்டமைப்பின் முடிவிற்கு தமிழ் மக்கள் வரவேற்பு

இதே வேகத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் கண்டுவிட வலியுறுத்தல்

ஜனாதிபதி மஹிந்தவின் பேராளுமைமிக்க தலைமைத்துவத்திற்கு புத்திஜீவிகள் பாராட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெள்ளியன்று நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் தெரிவித்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி முழு நாட்டு மக்களுமே தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு இதேவேகத்தில் இணக்கமான, விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். இந்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக மக்கள் ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இத்தகைய அரசியலை தமிழ்க் கூட்டமைப்பு முப்பது வருடங்களுக்கு முன்னர் அல்லது இறுதி யுத்தம் இடம் பெற ஆரம்பித்த காலப் பகுதியிலாவது மேற்கொண்டிருந்தால் மக்களும், நாடும் அழிவுகளைச் சந்திக்காமலேயே தீர்வினைக் கண்டிருக்கலாம் எனவும் புத்திஜீவிகள் கருத்துத் தெரிவித்தனர். எது எவ்வாறு இருப்பினும் இனிவரும் காலங்களில் இருதரப்பும் பரஸ்பரம் விட்டுக் கொடுப்புக்களுடன் செயற்பட்டு இனப்பிரச்சினைக்கு நல்லதோர் தீர் வினைக் காண முயற்சிக்க வேண்டும் எனவும் மக்களால் வலியுறுத்தப்பட் டுள்ளது.

இவ்விடயத்தில் ஜனாதிபதி அவர்கள் நடந்து கொண்ட விதம் ஒரு நாட்டின் தலைவருக்குரிய ஆளுமைமிக்க தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளதாகவும் கருதப்படுகிறது. இதனை தமிழ்க் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் பின்பற்றி சம்பந்தன் ஐயாவிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட வேண்டுமெனவும் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வெளியே வந்து அரசாங்கத்தை விமர்சிப்பது போன்ற கடந்த கால செயற்பாடுகள் போலல்லாது இம்முறை தமிழ்க் கூட்டமைப்பு உண்மையான இதய சுத்தியுடன் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் எனவும் மக்கள் கேட்டுள்ளனர். இதற்காகவே மக்கள் இம்முறை வடக்கில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு தமது ஆணையை வழங்கியிருந்தார்கள் எனவும் புத்திஜீவிகள் சிலர் தெரிவித்தனர்.

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]