சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ஷஃபான் பிறை 22
SUNDAY OCTOBER 06 2013

Print

 
வெற்றி இறுமாப்பு கண்களை மறைத்தல் ஆரோக்கியமல்ல

வெற்றி இறுமாப்பு கண்களை மறைத்தல் ஆரோக்கியமல்ல

நடந்து முடிந்த தேர்தலில் வடக்கில் வாழ்கின்ற பெரும்பாலான தமிழ் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். மக்கள் தமக்குத் தந்த இந்த சற்றுமே எதிர்பாராத வெற்றியை தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் எக்கோணத்தில் ஏற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை, ஆனால் இறுமாப்பில் கண்களை மறைக்கும் நிலையில் நிற்கிறார்கள் என் பதை வடக்கில் உணர முடிகிறது. உண்மையில் தமிழ் மக்கள் தமது வாக் குகளை ஒருபோதும் தமது சுய விருப்பின் பேரில் அளிக்காது ஏதோ வொருவிதமான மயக்கத்தில் வழங்கியுள்ளார்கள் என்பது மட்டும் நிச்சய மானதொன்றாகக் கூற முடியும். அந்த மயக்கத்திற்கான காரணத்தை முத லில் கண்டுபிடிக்க வேண்டும்.

அதேவேளை வடக்கில் இருபது சதவீதத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கும் தமது வாக்கு களை அளித்துள்ளமையையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாமே வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள முடியாது. இதே நிலைமையை நாம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தெளி வாக அவதானிக்க முடிந்தது.

ஒரு காலத்தில் வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தாமே எனப் புலிகள் தமக்குத் தாமே மகுடம் சூடி வந்தனர். அந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அதனை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுதான் அன்றைய காலகட்ட நிலையாக இருந்தது. ஆனாலும் அக்காலத்தில் கூட புலிகளுக்குப் புறம் பான தமிழ் அரசியல் சக்திகளும் வடக்கு கிழக்கில் இருந்தே வந்துள் ளன. அவையும் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகளையும் கண்டு வந்துள்ளன.

இன்று புலிகள் இல்லை. புலிகளுடன் உறவு வைத்திருந்த தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறியுள்ளது. யுத்தத் திற்குப் பின்னரான கடந்துவந்த தேர்தல்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக் களில் கணிசமானோர் இவர்களை ஆதரித்துள்ளனர். அந்த நிலையே நட ந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலிலும் காணப்பட்டது. தமது வீர வச னங்கள் நிறைந்த மேடைப் பேச்சுக்கள், அனல் பறக்கும் அறிக்கைகள் மூலமாக தமிழ்க் கூட்டமைப்பினர் மக்களைக் கவர்ந்து தமக்குச் சாதக மாக தீர்ப்பை எழுதியுள்ளனர். அதற்குப் பின்னால் என்ன நடக்கப் போகி ன்றது என்பதிலேயே அம்மக்கள் எதிர்ப்பார்ப்புடன் வழங்கிய ஆதரவுக் கான பதில் காத்திருக்கிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவென அன்று புலிகள் அமைப்பு இலங்கை அரசாங்கங்களுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையை விட்ட இடத்திலிருந்து தமிழ்க் கூட்டமைப்பு தொடர் ந்து வந்தது. இறுதி யுத்தம் நடந்து முடிந்து நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் கூட்டமைப்பு சில சுற்றுப் பேச்சுக்களை நடத்திவிட்டு அதிலி ருந்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பின்வாங்கி விட்டது. பாரா ளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்த போதும் இன்றுவரை தட்டிக் கழித்து வருகிறது. தமிழ்க் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து ஒரு தீர்வை எதிர்பார்க்கின்றது. இது நடைபெறக் கூடியதொன்றா என்பதையும் ஆராய்ந்து பார்த்தல் அவசியம்.

அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை அரசாங்கத்தினால் இலகுவாக முன்வைக்க முடியும். ஆனால் தமிழ் மக்களின் சார்பில் தேர் தலில் போட்டியிட்டு அம்மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ள தமி ழ்க் கூட்டமைப்புடனும் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தே தீர்வி னைக் காண வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந் நிலையில் வெற்றி பெற்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பு இன்று அத்தமிழ் மக் களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏதாவது செய்தாக வேண்டும் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் ஏற்கனவே நடந்து முடி ந்த பாராளுமன்ற, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் ஆணை யைக் கோரி வெற்றி பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு இதுவரை மக்கள் பிரச் சினைக்கு தீர்வு காண எந்தவிதமான ஆக்க பூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இது மக்களுக்கு நன்கு தெரியும். தெரிந்திருந்தும் மக்கள் இம்முறையும் வாக்களித்திருக்கிறார்கள். பெரும்பாலும் மக்கள் வழங்கும் இறுதி ஆணை இதுவாகவே இருக்கும்.

அரசாங்கம் இந்நாட்டிலுள்ள அனைத்து இன, மத, மொழி மக்களுக் கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டிற்குள் உள்ளது. அத்துடன் எதி ர்க்கட்சிகளின் பொய்யான சோடிக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் கவ னத்திற்கொண்டும் நாட்டு நலனைக் கருதியும் செயற்பட வேண்டியுள்ளது. அவ்வாறிருந்தும் அரசாங்கம் தமிழ்க் கூட்டமைப்பிற்கு மதிப்பளித்து அவர்கள் மூலமாக தமிழ் மக்களுக்குரிய கெளரவத்தை வழங்கி பிரச் சினைக்குத் தீர்வு காண சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

அரசாங்கம் நினைத்திருந்தால் தமிழ்க் கட்சிகள் எதனையும் கருத்திற் கொள்ளாது தமிழ் மக்களது பிரச்சினைக்கு இதுதான் தீர்வு, இதனைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதனையாவது கூறித் திணித்திருக் கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யப்படவில்லை. நிச்சயமாக இன் றைய அரசாங்கம் அதனைச் செய்யமாட்டாது என்பது அதன் நற்செயற் பாடுகளிலிருந்து தெரிகிறது.

எனவே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு வெற் றிக் களிப்பில் இறுமாப்புக் கொள்ளாது அரசாங்கத்தின் விட்டுக் கொடுப் புக்களைக் கருத்திற் கொண்டு, காலத்தைக் கடத்திக் கொண்டிராது உடன டியாகவே தீர்வு குறித்தக் கலந்துரையாட முன்வர வேண்டும். அரசியல் அநாதையாகவுள்ள தமிழ் மக்கள் ஒரு நல்ல தீர்வினைப் பெற்றுக் கொள்ள கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஆரோக்கியமான பேச்சுவார்த் தைகளில் ஈடுபட வேண்டும். உண்மையில் அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களாக வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற் கொண்டு வருகின்றது. நிவாரணம், மீள் குடியேற்றம் ஒருபுறமிருக்க தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுக்கவும் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ திடசங்கற்பம் பூண்டுள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சகலருமே தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். அவர்களுக்குத் தேவையான சகலவிதமான உதவிகள் பலவும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் தமிழ்க் கூட்டமைப்பினர் தமது பொய்ப்பிரசாரங்கள் மூலமாக மக்களைத் திசை திருப்பி மீண்டுமொரு வெற்றியைக் கண்டுள்ளனர் என்பதே உண்மை.

[email protected]


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]