விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
பவெல், டைசனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்னாள் சாம்பியன்கள்சர்வதேச அளவில் பிரபலமான குறுந்தூர ஓட்ட வீரர்களான ஜாமய்க்காவின் அசபா பவெல் மற்றும் அமெரிக்காவின் டைசன் கே ஆகியோர் தடைசெய்யப் பட்ட ஊக்கமருந்து உட் கொண்ட குற்றச்சாட்டு காரண மாக முன்னாள் குறுந்தூர ஓட்ட வீரர்கள் இரு குழுக் களாக பிரிந்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட் டப்படுவோருக்காக தாம் குரல் கொடுக்கவுள்ளதாக 200 மீட்டர் ஓட்ட முன்னாள் உலக சாம்பி யனான எட்டோபோல்டன் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு ஊக்கமருந்து உட்கொண்ட சர்ச்சைக்கு உள்ளாகும் வீரர்களுக்கு ஆதரவாக எட்டோ போல்டன் குரல் கொடுக்கின்றபோது, முன்னாள் 100 மீட்டர் ஓட்ட உலக சம்பியன் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான டொனொவென் பேலி, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை உட்கொள்ளும் வீரர்களை போட்டிகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடைசெய்ய வேண்டுமென குரல் கொடுத்துள்ளார். எப்படியாயினும், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து மற்றும் மருந்து வகைகள் தொடர்பான அறிவு சாதாரண அளவு அல்லது மிகக் குறைந்த அளவிலேயே வீரர்கள் மத்தியில் காணப்படுவதால், முதல்தடவை அவ்வாறான தவறிழைக்கும் போது அவர்கள் மண்ணிக்கப்பட வேண்டும் என்பதே, அவரது வாதமாகும்.
|
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |