விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 21, 2013

Print

 
யாழ். ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கு

கடந்த காலத்தை பேசிக் கொண்டிராமல் எதிர்காலத்தை நோக்கி செல்வோம்

அபிவிருத்தி பணிகளில் வடக்கிற்கு முக்கியத்துவம்

யுத்தத்தினால் வடக்கு மட்டுமல்ல இலங்கையின் அனைத்து பகுதிகளுமே பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அபிவிருத்தி பணிகள் எதனையும் செய்ய முடியாமல் இருந்தது. இனி கடந்த காலங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்காது எதிர்காலத்தை நோக்கிச் செல்வோம் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் மாகாண சபை தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 30 வருடகால யுத்தத்தில் வடக்கு மாகாணம் மட்டும் பாதிக்கப்படவில்லை. இலங்கையின் கிழக்கு, தெற்கு, மலையகம் என அனை த்து மாகாணங்களுமே பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அபிவிருத்திப் பணிகளைக் கூட செய்ய முடியாது இருந்தது. எதிர் வரும் காலங்களில் கடந்த காலங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்காது எதிர்காலத்தை நோக்கிச் செல்வோம்.

2006 ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத் திற்கு வரும் போது வீதிகளின் ஒவ்வொரு 500 மீற்றர் தூரத்திலும் சோதனைச் சாவடி கள் போடப்படடிருந்தன. ஆனால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்த நிலை மாற்ற மடைந்து மக்கள் சமாதானத்துடனும் அபிவிருத்தியுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

மாகாண சபை அதிகாரங்கள் வடக்கிற்கு இல்லாது விட்டாலும் ஏனைய மாகாணங் களை விட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கு அதிக முக்கி யம் கொடுத்து ஜனாதிபதி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பார்.

அத்துடன் ஜனாதிபதி இன, மத, பேதம் இன்றி செயற்பட்டு கொண்டு வருகின்றார். எனவே அவருக்கு ஆதரவளித்து தேர்தல்களில் வெற்றிப்பெற செய்ய வேண்டும். இதற்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்தவர்கள் இவ்வாறான தேர்தலை நடத்த முன்வரவில்லை ஆனால் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வந்துள்ளார்.

அதன்படி இந்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கில் 19 பேர் போட்டியிட உள்ளனர். நாம் தேர்தலை நடத்துவது தோற்றுப்போக அல்ல. நீதிக்கு அடிபணிந்து வெற்றிபெற்று அபிவிருத்தியை முன்னெ டுத்து மக்களின் வாழ்க்கையினை ஒளிபெறச் செய்வதற்கே என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]