விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 21, 2013

Print

 
இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகள் கொஸ்கம வீட்டிலிருந்து கண்டுபிடிப்பு

இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகள் கொஸ்கம வீட்டிலிருந்து கண்டுபிடிப்பு

அவிஸ்ஸாவலை கொஸ்கம பகுதி யிலுள்ள வீடொன்றை சோதனையிட்ட போது இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் அதிகார சபையின் அதிகாரிகளும் கொஸ்கம பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே இரண்டு இலட்சம் தூக்க மாத்திரைகள் (ளியிதிZரிஜிதிணி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மருந்தாளர், மருந்தகம் அல்லது அரசுக்கு மருந்து விநியோகிப்பவர் தவிர்ந்த ஒரு நபரிடம் இவ்வாறு தூக்க மாத்திரைகள் இருந்ததன் காரணம் என்ன? என்பது பற்றியும் கண்டறியுமாறும் உத்தரவிடப்பட் டுள்ளது.

மருத்துவரின் ஆலோசனையின்றி அவரது எழுத்து மூலமான ‘சிட்டை’ இன்றி இந்த வகை மருந்து வழங்கப்படமாட்டது. எனினும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு பயன்படுத்துவதற்காக இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

‘கொரெக்ஸ்’ என்ற இருமல் பாணி மருந்து அளவுக்கு அதிகமாக உட்கொண்ட 12 பேர் மரணமாகியுள்ளனர். அவற்றுக்கும் இந்த தூக்க மாத்திரையை பயன்படுத்தி யிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]