விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 21, 2013

Print

 
வடக்கின் அபிவிருத்தி: 3 வருடத்தில் 16,132 கோடி ரூபா செலவு

விவசாயம், போக்குவரத்து, கைத்தொழில், குடிநீர்

வடக்கின் அபிவிருத்தி: 3 வருடத்தில் 16,132 கோடி ரூபா செலவு

கடந்த மூன்று வருட காலத்தில் வடக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் விவசாய, கைத்தொழில், போக்குவரத்து, குடிநீர் வசதிகளை அதிகரிப்பதற்குமென 16,132 கோடி ரூபா செலவிடப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதனுடன் இணைந்ததாக இந்த அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி விவசாயத்துறை அபிவிருத்திக்கு 910 கோடி ரூபாவும் கைத்தொழில், சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறை மேம்பாட்டிற்காக 135.4 கோடி ரூபாவும் போக்குவரத்துத்துறைக்காக 9394.98 கோடி ரூபாவும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க 1565.98 கோடி ரூபாவும், குடிநீர் வசதிகளுக்கு 403 கோடி ரூபாவும் நிர்வாக பொது வசதிகளுக்காக 213.86 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் 3113.36 கோடியும் 2011ஆம் ஆண்டில் 6500.51 கோடியும், 2012ஆம் ஆண்டில் 6116.44 கோடியும் அரசாங்கம் செலவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டிலும் பல்வேறு துறைகளில் அபிவிருத்திக்காக அரசாங்கம் பலகோடி ரூபா செலவளித்து வருவதோடு சர்வதேச நிறுவனங்களும் அபிவிருத்திக்கு பங்களித்து வருகின்றன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]