விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03
SUNDAY APRIL 21, 2013

Print

 
பரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன், கருத்தரங்குகளை நிறுத்தல்

பரீட்சை தினத்திலிருந்து 05 நாட்களுக்கு முன் டியூசன், கருத்தரங்குகளை நிறுத்தல்

வர்த்தமானி நேற்று வெளியானது

க.பொ.த சாதாரண தரம், உயர்தரம், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னரேயே டியூஷன் வகுப்புக்கள், கருத்தரங்குகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பகிரங்கப் பரீட் சைகள் சட்டத்தின் 22வது பந்தியின் கீழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி மூன்று பரீட்சைகளும் ஆரம்பமாகும் தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னிருந்து பரீட்சைகள் முடிவடையும் திகதிவரை டியூஷன் வகுப்புக்கள், கருத்தரங்குகள், மீட்டல் வகுப்புக்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது. அதேபோன்று, பரீட்சைகளுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல், அச்சிடல், பகிர்ந்தளித்தல், போஸ்டர்கள், பனர்கள், துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், மின்னஞ்சல்கள் அனுப்புதல் அல்லது இவற்றை அருகில் வைத்திருத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]