நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் அவ்வல் பிறை 14
SUNDAY DECEMBER 30, 2012

Print

 
அம்பாறையில் மழை ஓய்ந்தது; அறுவடை மீண்டும் ஆரம்பம்

அம்பாறையில் மழை ஓய்ந்தது; அறுவடை மீண்டும் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் நேற்று (16) சீரான காலநிலை அறுவடைகள் இயந்தி ரங்களின் துணையுடன் ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

கடந்த ஒரு வாரகாலமாக இடைவிடாது இரவு பகல் என தொடர்ந்து பெய்த கன மழையினால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நெல்வேளான்மைகள் மிக சோமான அழிவுகளை சந்தித்துள்ளன. இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் நெல் உட்பபட ஏனைய சிறு தானியங்களான பயிறு, உழுந்து, குரக்கன், கெளபீ, மற் றும் இறுங்கு போன்ற பயிர்கள் மீள அறுவடை செய்ய முடியாத அழிவுகளையும் கண்டுள்ளன.

நேற்று முன்தினமான காலநிலை ஓரளவு சீரானது. சீரான காலநிலை ஏற்பட்டு நெற்கதிர்களில் ஈரப்பதன் குறைவடைந்ததை தொடர்ந்து அறுவடை களை விவசாயிகள் மேற் கொள்கின்றனர். ஆனால் நெல் விளைச்சல் 75 வீதமாக குறைவடைந்துள்ளது. இது விவசாயிகளை பாரிய கவலைக்கு உட் படுத்தியுள்ளதுடன் விவசாயத் துறைக்குப் பெற்றுக் கொண்ட கடன் மீள செலுத்த முடியாத நிலையிலும் விவசாயிகள் உள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]