நந்தன வருடம் தை மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் அவ்வல் பிறை 14
SUNDAY DECEMBER 30, 2012

Print

 
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் :

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடர் :

இலங்கைக்குழு அடுத்த வாரம் பயணம் ; உறுப்பினர்கள் பெயர்கள் வெளியாகவில்லை

நவநீதம்பிள்ளையின் ஒருதலைப்பட்ச அறிக்கை மார்ச் 20 இல் பரிசீலனை

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கான இலங்கை தூதுக் குழு அடுத்த வார இறுதியில் ஜெனீவாவுக்கு செல்லவிருப் பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சா ளரான ரொட்னி பெரேரா அறிவித்துள்ளார்.

இலங்கை தூதுக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்பதும் இலங்கை தூதுக் குழுவுக்கு யார் தலைமை தாங்குவார் என்பதும் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். மனித உரிமைகளுக்கான ஜெனீவா பேரவையின் கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறும்.

இக் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் அனுசரணையுடனான இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்று ஜெனீவா பேரவையில் முன்மொழியப்பட்டால், இதில் கலந்துகொள்ளும் இலங்கைத் தூதுக்குழு வினர் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கு பின்னர் அரசாங்கம் மேற் கொண்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அங்கு எடுத்துரைப்பதற்கு தயார்நிலையில் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இராணுவ நீதிமன்றம் யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற மனித படுகொலை பற்றி வெளியிட்ட ஆதாரபூர்வமான அறிக்கையையும் அங்கு சமர்ப்பிப்பதற்கு தூதுக் குழுவினர் தயார்நிலையில் இருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங் கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கைக்கும் இலங்கை தூதுக் குழுவினர், அவரது காரியாலயத்திற்கு ஏற்கனவே தமது நிலையை எழுத்து மூலம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நவநீதம்பிள்ளையின் அறிக்கை மார்ச் மாதம் 20 ஆம் திகதியன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள் ளப்படும்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கை ஒருதலைப்பட்சமான அறிக்கை என்றும் அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்திய நல்லிணக்க செயற்பாடுகளை இவ்வறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டி இலங்கை இவ்வ றிக்கையை நிராகரித்துள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]