நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
தமிழ் பெண்களின் கெளரவத்தை மலிவு விலைக்கு விற்பது தமிழ் அரசியல்வாதிகளே!

வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டே இராணுவத்தில் சுயமாக இணைந்தனர் ;

தமிழ் பெண்களின் கெளரவத்தை மலிவு விலைக்கு விற்பது தமிழ் அரசியல்வாதிகளே!

பழி சுமத்த வேண்டாமென ஊடகங்களிடமும் கீதாஞ்சலி கோரிக்கை

இணைந்துள்ள பெண்களுக்கு பிரச்சினை எனில் தன்னைத் தொடர்பு கொள்ளவும் கோரிக்கை

பெண்களின் சுய மரியாதையை களங்கப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் பொய் பரப்புரை செய்வதை உடனடி யாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ந.கீதாஞ்சலி ‘வாரமஞ்சரி’க்குத் தெரிவித்தார்.

பெண்கள் தமது வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டே இராணுவத்தின் நிர்வாகப் பிரிவில் பணிக்குச் சேர்ந் துள்ளனர். அவர்களை எவரும் பலவந்தமாக இணைத்துக்கொள்ள வில்லை. தன்னார்வத்துடனேயே இணைந் தார்கள் என்றும் கீதாஞ்சலி சுட்டிக்காட்டினார். பிறரின் அரசியல் தேவைகளுக்காகப் பெண்களின் கெளரவத்தை மலிவான விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய கீதாஞ்சலி, பெண்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்த வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்தார். இராணுவத்தில் இணைந்துள்ள பெண்களுக்குப் பிரச்சினை என்றால் தன்னிடம் முறையிடலாம் என்றும் கூறிய அவர், இதுவரை தமக்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

‘வடமாகாணத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலைத் தோற்றுவிப்பதற்காக பேரவையொன்றை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சகல அரசியல் அமைப்புக்களைச் சார்ந்தவர்களையும் உள்வாங்கியுள்ள இந்த அமைப்பில் இணைந்துள்ள பெண்கள் சகல விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

(கீதாஞ்சலியுடனான விரிவான பேட்டி அடுத்த வாரம் வெளியாகும்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]