நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை SUNDAY DECEMBER 30, 2012 |
||
சுயரூபக் கோவைபெயர் : விக்கிரமபாகன் கருணாரத்னம் வயது : ஒவ்வொரு வருடமும் ஏறிப் போகிறது தொழில் : வித்தியாசமான, விவகாரமான அரசியல்வாதி உண்மையான தொழில் : எதுவும் இருப்பதாக இல்லை சைட் பிஸினஸ் : எவராலும் கண்டுபிடிக்கவே முடியாத ஒன்று வருமானம் : வெளியே தெரியாது தானாக, தாராளமாக வந்து சேர்ந்துவிடும் பொழுது போக்கு : தமிழ்மொழி கற்பது அதிகம் இரசிப்பது : ஆர்ப்பாட்டங்களில் சிவத்த அங்கியுடன் முதல் வரிசையில் நிற்பது அசைக்க முடியாத பலம் : தொண்டைக்குழியிலுள்ள ஒலிபெருக்கி அசைக்கக் கூடிய பலம் : தற்காலிகமாக ஆதரவு வழங்கும் சில தமிழ்பேசும் மக்கள் எதிர்பார்ப்பு : தமிழ் மக்களின் தலைவனாவது நண்பர்கள் : தமிழர்கள் (உண்மையாக) எதிரிகள் : சிங்களவர்கள் (பொய்யாக) மறந்தது : நாட்டுப்பற்று மறக்காதது : இனவிரிசலை ஏற்படுத்தும் பேச்சு ஏக்கம் : தமிழர் வாக்குகளில் பங்குபோட தலைநகரில் பல தமிழர் முளைத்துள்ளமை தவறவிட்டது: அரசுடன் இணைந்து அரியாசனம் ஏறி அமர்வதை நிறைவேறாத ஆசை : தனது கட்சியைக் கலைத்துவிட்டு மனோவின் கட்சியில் இணைத்தலைவராவது நிறைவேறிய ஆசை : மனோவின் புண்ணியத்தால் இதுவரை கால அரசியலுக்கு அங்கீகாரம் மிகவும் பிடித்தது : மேடையும் ஒலிவாங்கியும், ரி.வி.கமராவும் மைக்கும் சாதனை : மாநகர சபையொன்றின் உறுப்பினரானது அதிக மரியாதை வைத்திருப்பது : மனோ கணேசனில் (தற்போது) மனம் வெதும்பிய சந்தர்ப்பம் : படம் எடுக்கையில் ஒருவர் தன்னைப் பின்னே தள்ளிவிடுவது எதிர்கால இலட்சியம் : மாகாண சபை பின்னர் பாராளுமன்ற உறுப்பினராவது கோபம் கொள்வது : தமிரை எவராவது ஏமாற்றுவது எதிர்பார்த்துக் கொண்டிருப்பது : வட அல்லது மேல் மாகாண சபைத் தேர்தலை எதிர்பாரா சம்பவம் : மனோவுடனான கூட்டு |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |