புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
சுயரூபக் கோவை

சுயரூபக் கோவை

பெயர் : விக்கிரமபாகன் கருணாரத்னம்

வயது : ஒவ்வொரு வருடமும் ஏறிப் போகிறது

தொழில் : வித்தியாசமான, விவகாரமான அரசியல்வாதி

உண்மையான தொழில் : எதுவும் இருப்பதாக இல்லை

சைட் பிஸினஸ் : எவராலும் கண்டுபிடிக்கவே முடியாத ஒன்று

வருமானம் : வெளியே தெரியாது தானாக, தாராளமாக வந்து சேர்ந்துவிடும்

பொழுது போக்கு : தமிழ்மொழி கற்பது

அதிகம் இரசிப்பது : ஆர்ப்பாட்டங்களில் சிவத்த அங்கியுடன் முதல் வரிசையில் நிற்பது

அசைக்க முடியாத பலம் : தொண்டைக்குழியிலுள்ள ஒலிபெருக்கி

அசைக்கக் கூடிய பலம் : தற்காலிகமாக ஆதரவு வழங்கும் சில தமிழ்பேசும் மக்கள்

எதிர்பார்ப்பு : தமிழ் மக்களின் தலைவனாவது

நண்பர்கள் : தமிழர்கள் (உண்மையாக)

எதிரிகள் : சிங்களவர்கள் (பொய்யாக)

மறந்தது : நாட்டுப்பற்று

மறக்காதது : இனவிரிசலை ஏற்படுத்தும் பேச்சு

ஏக்கம் : தமிழர் வாக்குகளில் பங்குபோட தலைநகரில் பல தமிழர் முளைத்துள்ளமை

தவறவிட்டது: அரசுடன் இணைந்து அரியாசனம் ஏறி அமர்வதை

நிறைவேறாத ஆசை : தனது கட்சியைக் கலைத்துவிட்டு மனோவின் கட்சியில் இணைத்தலைவராவது

நிறைவேறிய ஆசை : மனோவின் புண்ணியத்தால் இதுவரை கால அரசியலுக்கு அங்கீகாரம்

மிகவும் பிடித்தது : மேடையும் ஒலிவாங்கியும், ரி.வி.கமராவும் மைக்கும்

சாதனை : மாநகர சபையொன்றின் உறுப்பினரானது

அதிக மரியாதை வைத்திருப்பது : மனோ கணேசனில் (தற்போது)

மனம் வெதும்பிய சந்தர்ப்பம் : படம் எடுக்கையில் ஒருவர் தன்னைப் பின்னே தள்ளிவிடுவது

எதிர்கால இலட்சியம் : மாகாண சபை பின்னர் பாராளுமன்ற உறுப்பினராவது

கோபம் கொள்வது : தமிரை எவராவது ஏமாற்றுவது

எதிர்பார்த்துக் கொண்டிருப்பது : வட அல்லது மேல் மாகாண சபைத் தேர்தலை

எதிர்பாரா சம்பவம் : மனோவுடனான கூட்டு

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.