நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
பாதாளக் குழுக்கள், போதைப் பொருள் இரண்டிற்கும் விரைவில் முற்றுப்புள்ளி

குடுவை ஒழித்துத் தருமாறு கெஞ்சும் சேரிப்புற மக்கள்

பாதாளக் குழுக்கள், போதைப் பொருள் இரண்டிற்கும் விரைவில் முற்றுப்புள்ளி

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சூளுரை

கொழும்பில் பாதாள உலகக் குழு மற்றும் குடு போதை பொருளை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு மற்றும் நகர அபி விருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரை அண்மித்துள்ள குடியிருப்புக்களுக்குச் சென்றால் ஐயோ சேர் குடுவை ஒழித்து தாருங்கள் என அந்த மக்கள் கோருவதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளானது அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டுக்கு அச்சுறுத்தல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் இக்கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது கொழும்பு மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.ணீசீணீ.lk ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸாம்மில் எதிர்கட்சித் தலைவர் தன்னை சந்திக்கும்போதெல்லாம் இணையத்தளம் எப்போது திறந்து வைக்கப்படும் என வினவுவார் என கூறினார். அத்துடன் கொழும்பு நகரை அபிவிருத்தி செய்ய பாதுகாப்பு செயலாளர் வழங்கி வரும் ஒத்துழைப்பை வரவேற்பதாக கொழும்பு மாநகர சபை மேயர் குறிப்பிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]