நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
சமரசமாக முடிவுற்ற சம்பவத்தை

சமரசமாக முடிவுற்ற சம்பவத்தை

பெரிதாக்க முனைந்த மக்கள் பிரதிநிதி  பரந்தனில் பொதுமக்களிடம் வாங்கிக் கட்டிய கூட்டமைப்பு எம்.பி

கிளிநொச்சி பரந்தனில் தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தமிழ் மக்கள் திட்டியதுடன் ஓட ஓட கலைத்துள்ளனர். ஏ9 வீதியில் மோட்டர்சைக்கிளில் பயணித்துக் கொண்டு இருந்தவர்களை பொலிஸார் மறிக்க நிற்காமல் சென்றதால் பொலிசிற்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இறுதியில் இரு இளைஞரும் சமாதானமாக பேசி விடை பெற்றுச் சென்றனர்.

ஏ9 வீதியால் பயணித்த இவர்களை வீதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைமறிக்க நிற்காது சென்றதால் பொலிஸ் அதிகாரிகளும் இப்பகுதி பொதுமக்களும் இணைந்து சுற்றிவளைத்து இளைஞர்களை பிடித்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் இரு இளைஞர்களும் தாம் இவ்வாறு நிற்காது ஓடியது தவறு என மன்னிப்பு கேட்டதால் பொலிஸ் அதிகாரி இவர்களை மன்னித்து விடுதலை செய்துள்ளார்.

விடுதலையின் போது சம்பவ பகுதியால் பயணம் செய்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் வானிலிருந்து இறங்கி வந்து இந்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரி தனக்கு தெரிந்தவர் நான் தான் கதைத்து உங்களை விடுதலை செய்தேன் என்று கூறிக்கொண்டு நாம் எல்லோரும் ஒன்றாக நின்று படம் எடுக்கலாம் என்று அழைக்க கோபம் அடைந்த மக்கள் உங்களுக்கு அரசியல் செய்ய நாங்களா கிடைத்தோம் நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போகலாம் என அவர் மீது பாய்ந்து விழுந்தனர்.

இந்த இரண்டு இளைஞர்களும் சிறிதரனை பார்த்து நாம் செய்தது பிழைதான் என மன்னிப்பு கேட்டோம். அவர்களும் மன்னித்து எங்களை விடுதலை செய்து விட்டனர். ஏன் நீங்கள் அதற்குள் வருகிaர்கள் எனக் கூற அந்தப் பாராளுமன்ற உறுப்பினரோ இல்லை இல்லை நான் தான் பேசி உங்களை விடுதலை செய்தேன் எனப் பொய் கூறியதால் அவருக்கும் மக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இறுதியில் இனி எமது வாழ்க்கையை குழப்பாது நீங்கள் உங்களுடைய பாதையில் செல்லுங்கள் எங்களுடைய பிரச்சினையில் தலைபோட வேண்டாம். எமது வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்பது எமக்கு தெரியும் எனக் குறிப்பிட்டு அவரை விரட்டியுள்ளனர்.

உங்களுடைய இணைய செய்திக்காகவும், ஏனைய இணையத்தை அலங்கரிக்க தேவைப்படும் செய்திக்காக எங்களை நீங்கள் விற்பனைப் பொருளாக மாற்ற வேண்டாம் என தெரிவித்து அனுப்பியுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]