நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
ஜீhனிஹீhழி ஜீhஹீhஜீ...

காதோடு காதாக...

* தந்திக்குத் தந்தி அடிக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள்

தமிழில் தந்தி வந்ததால் கலங்கிப் போயிருக்கும் தமிழ்ப் பத்திரிகைத்துறை முதலாளிவர்க்க ஜாம்பவான்கள் தங்கட பத்திரிகைகளை முன்னேற்ற எடுத்த முயற்சிகளும் கை கூடாமல் நழுவிப் போகவே இப்போ தந்தியை வரவிடாமல் தடுப்பது என்று மந்திராலோசனை நடத்தி வருகிறார்களாம். ஆனால் அவர்களிடம் தொழில் பார்க்கும் ஊடக ஜாம்பவான்களோ, நாங்கள் கூட்டமாக வருகிறோம், சான்ஸ் தரமுடியுமா என்று தந்திக்குத் தமிழில் தந்தி மேல் தந்தி அடிக்கிறார்களாம். அனேகமாக போகிற போக்கில் தைப்பொங்கலுக்குப் பின்னர் தமிழ்ப் பத்திகையுலகில் சூரியனும், தந்தியும்தான் நடைபோடும் போலத் தெரிகிறது.

தலைவரை மகிழ்விக்க அடித்த அழைப்பிதழால் வந்தது வினை

தமிழ்ச் சங்க வீதிக்குப் பெயர் மாற்றும் விடயத்தில் எந்தவிதமான பொலிட்டிக்ஸ¤ம் கிடையவே கிடையாது. பிரபாகரனின் பிறந்த தினம், மாவீரர் நினைவு நான் இனவாதம், சிங்களக் கடும்போக்கு, தம்பி குழப்பிவிட்டார் என்பதெல்லாம் ஒரேயொரு உண்மையை மறைக்கச் சோடிக்கப்பட்ட அப்பழுக்கற்ற பொய்கள். கடும் பாடுபட்ட பெரியவர் கங்கா வேணியன் தனது தலைவரை மகிழ்விக்க அடித்த இரண் டாவது அழைப்பிதழே இத்தனை பிரச்சினைக்கும் ஒரே யொரு காரணம். பாவம் பெரியவர் தெரிந்து செய்யவில்லை. கூடவே இருந்த எட்டப்பர்களால் வம்பாகிவிட்டது. இப்போ அதை மறைக்க எப்படியெல்லாம் உளற வேண்டியுள்ளது. இது ஏணி விழாவல்ல, அரச வைபவம் என்பதை மறந்துவிடக் கூடாது.

* வெறும் தபாலுறைகளுக்கு முதலிடம் பெரும் பணமுடிப்பிற்கு பின்னிலையா?

கொழும்பில் என்றுமில்லாதவாறு நூல் வெளியீடுகள் களைகட்டியுள்ளது. திருமண வைபவத்திற்கு புக் பண்ண முடியாத அளவிற்கு நூலாசிரியர்கள் மண்டபங்களை ஆக்கிரமித்துள்ளனர். தமிழ் எழுத்தாளர்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். ஆனால் இவர்களது அழைப்பிதழ்களைப் பார்த்தால் முகஞ்சுழிக்க வைக்கிறது. ஊரிலுள்ள தெரிந்த, தெரியாத பலரின் பெயர்களை அதில் சேர்ப்பது அழகு என நினைக்கிறார்கள். அதிலும் எத்தனை தவறுகள். இந்தப் பிரமாண்ட லிஸ்ட்டில் இறந்த கலைஞர்கள் சிலரது பெயர் களும் கூட இடம் பிடித்துள்ளது என்றால் பாருங்களேன். அதைவிடவும் முன்னிலை, பின்னிலை இவர்களுக்குத் துளியளவும் தெரியவே தெரியாது. விழாவை நடத்த முழுச் செலவை வழங்கும் பெரும் புரவலர்களை வெறுமனே ஓரத்தில் போட்டுவிட்டு வெறும் தபாலுறைகளை வைத்து நூலைப் பெறுவோருக்கு முக்கிய இடமளிப்பது நியாயமற்ற செயல்தானே. அழைப்பிதழ் அடிக்கும்போது அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை பெறுவது ஒன்றும் தரக்குறைவான விடயமல்லவே.

ஐம்பது பிரமுகர்களைக் கெளரவித்து சாதனை படைத்த மோகன்குமார்

ஒரு பொன்னாடையால் இரு அயல் நாடுகளுக்கிடையே இலக்கிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஐம்பது கலைஞர்களுக்கு ஒரே மேடையில் வைத்து பொன்னாடைகளைப் போர்த்தி சந்தன மாலை அணிவித்து பாராட்டுப் பத்திரமும் வழங்கிச் சாதனை படைத்திருக்கிறார் கலைஞர் மோகன்குமார். உண்மையிலேயே அவரையும் அவரது கிருஷ்ணா கலாலயத்தையும் பாராட்ட வேண்டும். முன்னர் இத்தகைய நிகழ்வுகளை ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சரவணபவ சிவாச்சாரியாரே வருடாவருடம் கொழும்பில் பிரமாண்டமாகச் செய்து வந்தமை ஞாபகத்திற்கு வருகிறது. கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணத்தில் அவர் மீண்டும் தனது பணியை ஆரம்பித்துள்ளார் போலத் தெரிகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு பொன்னாடைப் பாராட்டு மிக மிக அவசியம். அது அவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும். அந்தவகையில் மோகன்குமாருக்கு ஒரு சபாஷ்.

உலகம் அழியும் கதைக்கு ஒப்பான ரணிலின் ஆட்சியமைப்பு உறுதிமொழி

2014 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கப் போகிறாராம் ரணில் விக்கிரமசிங்க ஐயா. இத்தாலியில் வைத்துத்தான் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அதனால் பலரும் ரணில் ஐயா இத்தாலியில்தான் தனது ஆட்சியை அமைக்கப் போவதாக எண்ணியுள்ளனர். ஏனெனில் இலங்கையில் அவருக்கு இனிச் சான்ஸே கிடையாது என்பது உறுதியாகிவிட்டது. ரணில் ஐயாவின், ஆட்சியைப் பிடிப்பேன், ஜனாதிபதியாவேன் என்பதெல்லாம் உலகம் அழிகிறது கதை போலத்தான். அழியும் ஆனா அழியாது மாதிரி, ஆட்சியை அமைப்பார், ஆனா அமைக்கவே மாட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]