நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவே படையினர் ஆசிரியர்களாக மாறினர்

சீருடையிலும் இல்லை, சிங்களமும் கற்பிக்கவில்லை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கவே படையினர் ஆசிரியர்களாக மாறினர்

பொய்க்குற்றச்சாட்டை இராணுவம் முற்றாக மறுப்பு

இராணுவ சீருடை அணிந்த இராணுவ உத் தியோகஸ்தர்கள் கிளிநொச்சி பாடசாலைகளில் சிங்களம் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர் எனும் குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது. “கிளிநொச்சி கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை யினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வலய கல்வி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதிக்கு அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி, படையினரிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டு இந்த பாடங்களை தமிழில் கற்பிக்கக்கூடியவர்களை இனங்கண்டார்.

இந்நிலையில், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் கற்பித்தல் முறைகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்கள் இப்போது கற்பித்தலுக்கு தாயராக உள்ளனர்.

ஆனால், எவரும் சீருடையில் கற்பிக்க மாட்டார்கள். இவர்கள் சிவில் உடையில் கற்பிக்க பணிக்கப்படுவர்” என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

“உரிய அதிகாரிகளின் வேண்டுதலின் அடிப்படையில் மட்டுமே இது நடைபெறும். ஆனால், இதுகூட உரிய அதிகாரிகள் கிடைக்கும் வரையிலான தற்காலிக ஏற்பாடுதான்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நல்லெண்ணத்துடனான எமது செயற்பாட்டை சுயநல நோக்கமுள்ள சிலர் இராணுவம் இதை வற்புறுத்தி செய்வதாக சித்தரிக்கின்றனர். இது பிழையானது. அடிப்படையற்றது” என அவர் மேலும் கூறினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]