நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
கமலுடன் இணையும் ஸ்ருதி

கமலுடன் இணையும் ஸ்ருதி

உலகநாயகன் கமல்ஹாசனும், அவரது மகள் ஸ்ருதியும் புதுப்படமொன்றில் இணைந்து நடிக்கின்றனர்.

ஏற்கனவே ஸ்ருதி 7ம் அறிவு படத்தில் சு+ர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார் ஸ்ருதி.

பின்னர் தனுஷ் ஜோடியாக 3 படத்தில் நடித்தார். தற்போது பலுடி, ஏவடு என்ற இரு தெலுங்குப் படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல்ஹாசன் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தத் தகவலை கமல் ஐதராபாத்தில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியவை வருமாறு-

எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப்படமொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்குப் பட உலகில் பிரபலமாகிவிட்டார்.

ஆனால் இந்தியில் பெயர் வாங்கவில்லை. முன்னணி நடி கையாக உயர்ந்ததும் இந்தப் படத்தை எடுப்போம் என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]