நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
அருள் கொடுப்பவர் சுவாமி; கற்பிப்பவர் குரு இருவரும் இணைந்த சங்கமமே குருசுவாமி

அருள் கொடுப்பவர் சுவாமி; கற்பிப்பவர் குரு இருவரும் இணைந்த சங்கமமே குருசுவாமி

20 தடவைகள் சபரிமலையில் ஐயப்பன்

தரிசனம் பெற்ற சந்திரதாஸ் சுவாமிகள் கூறுகிறார்

இசைத்துறை மட்டுமல்ல ஆன்மீகத்துறையிலும் நீங்கள் தீவிர ஈடுபாடு உடையவர் அதைப்பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?

தாயின் வயிற்றில் இருக்கும் கர்ப்பப்பையின் வடிவமே ஓங்காரம் என்ற ஓம். ஆகையால் உலகத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏதோ ஒரு மதத்தில் ஆன்மீக உணர்வு உள்ளவர்களாக பிறக்கின்றார்கள். சுவாமி விவேகானந்தர் கூறியது போல் அனைத்து மனிதர் மனங்களிலும் அனைத்து சக்திகளும் இருக்கின்றன. அதே போல் இளமையில் இருந்த உள்ளூணர்வே என்னை ஆன்மீகத்தினுள் இழுத்துச் சென்றது. 1992இல் மாலை அணிந்து முதன் முதலாக மகா குருசுவாமி க. ரவீந்திரகுமார் (இலங்கையில் சபரிமலை வழிபாட்டை ஆரம்பித்த மகான்) அவர்களின் மூலமாகவே சபரிமலைக்குச் சென்றேன். அவரின் மறைவிற்கு பிறகு குருசுவாமி பொன் ரவீந்திரக்குமரன் மற்றும் அம்மனே வடிவான எனது தாய் கிருஷ்ணம்பாள், இவர்களிடம் மாலை அணிந்து இன்று வரை தொடர்ச்சியாக பெரு வழியில் யாத்திரை சென்று வந்திருக்கிறேன். ஒரே சங்கத்தினால் தொடர்ந்து 20 வருடங்கள் யாத்திரைமேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் செயலாளராக செயல்படும் அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கத்தின் சேவைகளை பற்றி கூறுங்களேன்?

எமது அகில இலங்கை ஐயப்பா சேவா சங்கத்தின் முதற் செயலாளராக மகா குரு அவர்களும் இரண்டாவது செயலாளராக திரு. மோகன்குமாரும், மூன்றாவது செயலாளராக குருசுவாமி பொ. ரவீந்திரகுமரனும், அவர்களின் பிறகு நான்காவது செயலாளராக அடியேனும் இருந்து சேவையாற்றி வருகின்றேன். காலத்திற்கேற்றவாறு அவர்களில் சேவைகள் இருந்திருக்கின்றன. எமது ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்ரம் கட்ட ஆரம்பிக்கும்போது கலைஞர் மோகன் குமாரின் சேவைகள் பாராட்டுக்குரியவை. அதுமட்டுமல்லாமல் தற்போதைய தலைவர் செந்தமிழ்ச் செல்வன் பிரதித் தலைவர் ரவீந்திரகுமரன் உபதலைவர் ராசையா சுவாமி பொருளாளர் ஆனந்தன் மற்றும் அனைத்துசங்க உறுப்பினர்களின் சேவைகள் நேர்த்தியாக இருந்தன.

நீங்கள் ஆதி ஐயப்ப ஷேத்திரத்தின் அறங்காவலராகவும், செயல்படுகின்aர்கள் இவ் ஆலயத்தின் மகிமைகளை பற்றி எமது வாசகர்களுக்கு கொஞ்சம் விளக்கம் அளிக்க முடியுமா?

அறங்காவலர் என்பது பெரியது. கோவில் தர்மத்தை அறம் என்பதில் மூலம் காப்பவரே அறங்காவலர். அது இறைவன் கொடுப்பது என்பதால் அதை மரியாதையோடு ஏற்றுக்கொள்வதோடு, குருசுவாமி வாழ்ந்த இல்லத்தை எப்படியாவது நாம் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்து கலைஞர் கே. மோகன் குமார் சுவாமி, குருசுவாமி பொ. ரவீந்திரகுரமன், குருசுவாமி செந்தமிழ் செல்வன், குருசுவாமி விஜயானந்த், குருசுவாமி ராமதாஸ் இவர்களோடு இணைந்து இந்த இல்லத்தை ஆதி ஸ்ரீ ஐயப்ப ஷேத்திரமாக மாற்றியதே ஒரு மகிமைதான். அதனால் அந்த ஆலயத்தில் ஏற்படும் மகிமைகள் பற்றி சொல்லவா வேண்டும். ஐயனின் திருவருளை வந்து பாருங்கள் உங்களுக்கே புரியும். இச்ஷேத்திரத்தை ஆரம்பிப்பதற்கு மூல காரணமாக இருந்த நிரஞ்சன் சுவாமி அவர்களை மறக்கவே முடியாது. ஐயப்பன் மகிமையால் உதவி செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி.

கடந்த 20 ஆண்டுகள் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு இவ்வருடம் தான் உங்களை குருசுவாமியாக பிரகடனப்படுத்தப் போகின்aர்களாம். இதை பற்றி கொஞ்சம் கூறுங்களேன்?

சபரி மலை யாத்திரையில் ஒரே நாள். அது பதினெட்டாவது மலை சென்று குருசுவாமியாக மலரும் நாள். அந்த நாள் கொண்டாடப்படக்கூடியது. ஆனால் என் வாழ்க்கையில் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால் குருசுவாமியாவதை தள்ளி வைத்தேன். அதன் விளைவு அடுத்த இரண்டு வருடங்களிலும் அதை நிறைவேற்றக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. எதுவும் முறைப்படி நடக்க வேண்டும் என்பது எனது இளமையில் இருந்து வந்த வழக்கம். அதுவும் மண்டல பூசைக்கு முதல் தீட்சை எடுத்த பிறகே அது நடக்க வேண்டும். என்பது எனது எண்ணம். சர்க்கரை பொங்கலை நாம் பிரசாதம் என்று சொல்வதில்லை சுவாமியின் நைவேத்தியத்திற்கு பிறகே நாம் பிரசாதம் என்கிறோம். அதே போல் பதினெட்டு வருடங்கள் சென்றிருந்தாலும் பிரகடனப்படுத்திய பிறகே குருசுவாமியாக வரமுடியும். அது மிக எளிமையாகவும் இருக்க வேண்டும். அதுவே ஐயப்பனின் தவக்கோலம்.

இப்பொழுது தெருவில் சென்றால் அளவுக்கு குருசுவாமிகள் காணப்படுகிறார்களே. இதற்கு காரணம் என்ன? இந்த குருசுவாமி என்று ஐயப்பன் அடியார்கள் அழைப்பதற்கு காரணம் என்ன?

எனக்கு பிடித்த ஒருநல்ல கேள்வி இக்கேள்வியை கேட்க உங்களை தூண்டிய ஐயனுக்கு நன்றி. ஒரு குருசுவாமி எப்படி இருக்கவேண்டுமென்று மகா குருவை நான் எனது இரண்டாவது மலையில் கேட்டபோது, எந்த குருவின் முன்னால் நீ அமர்ந்த பிறகு உன் மனதுக்கு சந்தோஷமும் அமைதியும் கிடைக்கின்றதோ அவரே நீ குருசுவாமியாக தேர்ந்தெடுக்கலாம் என்றார். எப்படி காசுக்கும் புகழுக்கும் ஆசைப்படாத நல்லொழுக்கம் என்ன தன்மை அர்ப்பணித்து சேவையாற்றக்கூடிய ஐயன் புகழ் அறிந்த பெருவழி பற்றி அனுபவமுள்ள ஒரு குருசுவாமியை தேர்ந்தெடுத்து அவர் கையால் மாலை போட்டு தொடர்ந்து ஒரே சங்கத்தின் கீழ் அதே குருசுவாமியோடு சென்று தனது 18வது மலையின் போது குருசுவாமிகளால் அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதியின் இந்து சமய ஆலேலாசகர் சிவஸ்ரீ பாலரவிசங்கர சர்மா சிவாச்சாரியார், இந்து சமய பணிப்பாளர் மற்றும் இலங்கையில் உள்ளபிரதான குருசுவாமிகள் இருவர் கையெழுத்திட்டு நான்கு சான்றிதழ்கள் உருவாக்கி ஒன்று அவருக்கும் மற்றைய மூன்றும் முறையே கையெழுத்திட்டவர்களும் வழங்கி இவர் ஒழுக்கமானவர் , இந்து தர்மத்தை காப்பவர். இந்து சமய நெறிகளை அறிந்தவர் என்று பிரகடனப்படுத்தவேண்டும்.

அவரும் பெரியோர்கள் முன்னிலையில் இவைகளைக் காப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும். யார் பிழை செய்தாலும் நான் பிழை செய்யமாட்டேன் என்று உறுதி மொழி கூற வேண்டும். காரணம் ஒரு சில குருசுவாமிகளினால் நமது சமயத்தவர்கள் தவறாக வழி நடத்தப்படுவது வேதனையளிக்கின்றது. அது மட்டும் அல்லாது யாத்திரை ஆரம்பிக்கும் முன்னதாக அகில இலங்கை ரீதியில் குருசுவாமிகளின் கூட்டம் நடைபெறவேண்டும். அதில் காலத்திற்கேற்றவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

குருசுவாமியை விட்டு விலக விருப்பமில்லையோ அல்லது அவரின் இருப்பு முக்கியமானதாக எல்லோராலும் கருதப்படுகிறதோ அவர்கள் குருசுவாமிகளுடன் புரிந்துணர்வுடன் சேவையாற்றலாம். அருள் கொடுப்பவர் சுவாமி கற்பிப்பவர் குரு, இருவரும் சேர்ந்து ஒருங்கே அமையப் பெற்றவர் தான் குருசுவாமி. ஆகையால் அவர் எப்படி இருக்க வேண்டும் சில நடைமுறைக்குள் நமது இப்போதைய பெரியோர்கள் இப்பொழுதாவது இதை கொண்டு வரவில்லை என்றால் நமது சுவாமிமார்கள். தவறாக வழிநடாத்தப்பட்டு, வேறு, வேறு வழிகளை நாட ஏதுவாக அமையலாம். பழங்கதைகள் நமக்குள் பேசி ஓர் மகிமை இல்லை. புதியவைகளைப் பற்றி சிந்திப்போம்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரவு ஹரிகர சுவாமிகள் போல இசையின் மூலம் இறைவனை அடைவோம். அது குறுகிய பாதை மட்டுமல்ல நல்ல ஒரு சுகானுபவம். விவேகானந்தர் கூறியது போல் அவரின் 150ஆவது வருடத்திலாவது பேசுவதை விடுத்து செயலில் இறங்குவோம்.

கலைத்துறையில் பிரவேசித்த பின்னணியாக அமைந்த சூழல் என்ன?

எனது தந்தை ஒரு இசையமைப்பாளர் அவர் மூலமாகவே இத்துறைக்கு பிரவேசித்தேன். இளமையில் இருந்தே என்னுள் இசை ஆர்வம் நிறையவே இருந்தது. எனக்கு 12 வயதாக இருக்கும் போது திரு. மோகன்ராஜ் (அப்சராஸ்) அவர்கள் லிrgan எனது தந்தை ஹார்மோனியம், நான் ஜால்ரா வாசித்து ஷி.ழி.கி.வி இல் 10 ரூபா சன்மானமாக பெற்றது இன்னும் நினைவில் இருக்கின்றது.

நீங்கள் ஒரு இசையமைப்பாளராக உருவாவதற்கு காரணகர்த்தாக்கள் யார்?

என்னுடைய தந்தை மற்றும் இலங்கை நாடகத்துறையில் நவரச நாயகி மறைந்த அமரர். மணிமேகலை அவர்கள்.

உங்கள் இசை அனுபவங்களைப் பற்றி கூறுங்களேன்?

கலைவாணி இசைக்குழு மூலமாக 200க்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் நிகழ்ச்சிகள் மற்றும் 50க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் 50 தடவைகளுக்கு மேல் மேடையேறிய 20 நாடகங்களுக்கும் இசையமைத்து இருக்கின்றேன்.

நீங்கள் பிரதமர் விருது பெற்ற இசையமைப்பாளர். இவ்விருது தங்களுக்கு எப்படி? எப்போது கிடைத்தது.?

2009 காலப்பகுதியில் கலைஞர். திரு. மோகன்குமார் நெறியாள்கையின் தயாரான “முட்டை” என்ற நாடகத்தின் மூலம் எனக்கு இவ்விருது கிடைத்தது. இந்நாடகத்தில் வரும் காட்சிகளை கலைஞர் கே. மோகன்குமார் அமைத்திருந்தவிதம், நான் சில விடயங்களை யோசித்து இசையமைக்க ஏதுவாக இருந்தது.

இதுவரை எத்தனை நாடகங்களுக்கு இசையமைத்துள்Zர்கள்?

ஐம்பதுமுறை... இருபதுக்கு மேற்பட்டநாடகங்கள்.

நீங்கள் இசையமைத்த நாடங்களில் பிடித்தமான நாடகம் பிடித்தமான இயக்குனர் யார்? என்பதை எமது வாசகர்களுக்கு விளக்குவீர்களா?

கலைஞர் கலைச்செல்வனின் “ஒரு கலைஞனின் கதை” கலைஞர் கே. மோகன் குமாரின் “அவன் மீண்டும் வருகிறான்”, கலைஞர் கே. செல்வராஜனின் “மெளனத்திரை” ஹெலன் குமாரி ராஜசேகரின் “கெரிஒன்டிரக்டர்”

உங்களது தலைமையில் இயங்கும் கலைவாணி இசைக் குழுவைப் பற்றி கூறுங்களேன்?

1987இல் விவேகானந்தர் இந்து இளைஞர் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராக இருந்து 100க்கு மேற்பட்ட கோவில்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினேன். பிறகு 1992 இல் அக்குழுவின் பெயரை கலைவாணி இசைக்குழுவாக மாற்றி 200க்கும் மேற்பட்டநிகழ்ச்சிகளை நடாத்தி வந்துள்ளேன்.

நீங்கள் பக்தி பாடல்கள் மட்டுமல்லாமல், சினிமா பாடல்கள் அடங்கிய மேடை நிகழ்வுகளை நடத்தி உள்Zர்களா?

ஒரு சிலரின் கட்டாயத்தின் காரணமாக கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் நடத்தி இருக்கின்றேன். அது மட்டும் அல்லாமல் சக்தி எப்.எம். இல் ஒலிபரப்பான ஆனந்த பஜா போன்ற நிகழ்ச்சிகளையும் குறிப்பிடலாம்.

இசைத் துறையில் உங்கள் எதிர்காலம் திட்டங்கள் என்ன?

இசை பயில ஆர்வமுள்ள குழந்தைகளுக்கும் லிrgan கற்பித்து அவர்களை இசைக்கலைஞர்களாக நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ளேன். இதற்கு சமூகத்திலுள்ள அநுசரணையாளர்கள் உதவ முன்வரவேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]