நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
அறிவிப்புக்கைல

 

 

செய்திகளில் பிறமொழிச் சொற்களை பயன்படுத்தும்போது அவற்றை கவனமாகக் கையாள வேண்டும். நேயர்கள் இலகுவாக புரிந்துகொள்ளத்தக்க வகையில் செய்தியை வழங்குதல் முக்கியம். எனவே ஒரு பொருளின் அல்லது சேவையின் அசல் சொல்லை பயன்படுத்துவதா அல்லது அதற்குரிய தமிழாக்கத்தை பயன்படுத்துவதா என்பதைத் தீர்மானிப்பது செய்தியாசிரியரின் பொறுப்பாகும். ஆனால், அனுபவம் வாய்ந்த ஒரு செய்தி வாசிப்பாளராலும் இதனை ஊகிக்கலாம். ஒரு பொருளின் அல்லது சேவையின் அசல் மொழிச் சொல்லை பயன்படுத்தினால் நேயர்கள் இலகுவாக புரிந்துகொள்வார்கள் என செய்தி வாசிப்பாளர் கருதுமிடத்து, அதனை செய்தியாசிரியருடன் கலந்தாலோசித்து முடிவுசெய்துகொள்ளலாம். அல்லது தமிழ் மொழி பெயர்ப்புதான் குறிப்பிட்ட வசனத்திற்கு பொருத்தமானதென கருதுமிடத்து, தமிழ் மொழி பெயர்ப்பையே பயன்படுத்தலாம்.

உதாரணமாக கணனியின் துணைக்கருவிகளில் ஒன்றான மெளஸ் (ணிousலீ) கருவியை எடுத்துக்கொண்டால், இந்த சொல் எல்லோருக்கும் பரீட்சயமானது. சிறுவர் முதல் கல்வி அறிவு அற்ற வயதானவர்கள் கூட அதனை மெளஸ் என்று அழைக்கப் பழகிக்கொண்டார்கள். இதற்கு நேரடி மொழிபெயர்ப்பை செய்யும்போது எலி என்று அர்த்தம். ஆனால், இவ்வாறு பயன்படுத்தப்படுவதில்லை. அல்லது இதற்குப் பொருத்தமான ஒரு சொல்லை தமிழில் கண்டுபிடித்து பிரபல்யப்படுத்தி மக்கள் மத்தியில் பழக்கத்திற்கு கொண்டு வரும்போது, நீண்டகாலம் சென்றுவிடும்.

கிrலீaking னிலீws என்பதற்கு தமிழில் மொழிபெயர்த்து சொல்வது பொருத்தமானதாக இருக்காது. உடைகின்ற செய்திதான் என்று அர்த்தப்படுத்த வேண்டும். ஆனால் இதனை இவ்வாறு எழுத முடியாது. எனவே, இந்த ஆங்கில வசனத்திற்கு இதே கருத்தைப் பெறக்கூடிய பிறிதொரு, பொருத்தமான தமிழ் சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும்.

கிrigaனீiலீr, ழிiலீutலீnat, விolonலீl போன்ற மக்களால் பரவலாக பேசப்படக்கூடிய, இத்தகைய இராணுவ பதவிப் பெயர்களுக்கும், உரிய தமிழாக்கம் இன்னும் பொருத்தமான முறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

மக்கள் மத்தியில் எத்தகைய கலைச் சொற்கள் வழக்கத்தில் கூடுதலாக இருக்கிறதோ, அவற்றை செய்திகளில் பயன்படுத்தும்போது, மக்களால் செய்தியை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு கலைச் சொல்லை தமிழுக்கு மொழிபெயர்த்து அதனை செய்திகளில் பயன்படுத்தியவுடன் குறிப்பிட்ட சொல்லை மக்கள் இலகுவாக புரிந்துகொள்ளமாட்டார்கள். இதற்கு சிறிது காலம் எடுக்கும். ஆனால் தமிழில் இத்தகைய சொற்களை அறிமுகப்படுத்த வேண்டுமென விரும்பினால், குறிப்பிட்ட சொல்லின் அசல்மொழிச் சொல்லையும் சேர்த்து சிறிது காலம் பயன்படுத்தும்போது, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்வார்கள். ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டால் அதில் உள்ள சில பாகங்களுக்குரிய பெயர்கள் காலா காலமாக ஆங்கிலமொழியிலேயே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக தீinனீ ஷிணீrலீலீn, கிonnலீt, கிuஜீஜீலீr, ஷிhoணீk திbsobலீr, தீippலீr போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றுக்கு ஏற்ற தமிழ்சொற்கள் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றே கூற வேண்டும்.

அண்மைக்காலங்களில் அனேகமாக கணனி மற்றும் தொலைபேசிப் பாவனையாளர்களால், பயன்படுத்தப்படும் றிilobytலீ, ணிலீgabytலீ, மிigabytலீ, ஹிலீrabytலீ, ஜிலீtabytலீ, ரிxabytலீ போன்ற சொற்கள் கணனியின் அல்லது கையடக்கத் தொலைபேசியின் வல்லமையோடு சம்பந்தப்பட்ட சொற்களாகும். ஆனால், இவற்றுக்கான தமிழாக்கச் சொற்களும், இதுவரை அறிமுகப்படுத்தப்படவில்லை. செய்திகளில் இவற்றை வாசிக்கும்போது, அதன் அசல் மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால் மாத்திரமே நேயர்களால் இலகுவாக புரிந்துகொள்ள முடிகிறது. செய்தியின் நோக்கம் நேயர்களுக்கு உண்மைத் தகவல்களை வழங்குவதே. ஒரு செய்தியை எவ்வாறு சொன்னால் மக்கள் விளங்கிக் கொள்வார்களோ, அவ்வாறு சொல்லப்பட வேண்டும். மக்களுக்கு தகவல்களை விளங்க வைப்பதே நோக்கமன்றி, மொழியை கற்பிப்பது அல்ல.

(தொடரும்...)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]