நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 30, 2012

Print

 
விஞ்ஞான வளர்ச்சியின் நன்மைகள்

விஞ்ஞான வளர்ச்சியின் நன்மைகள்

உலகம் சுருங்கியுள்ளது. இயற்கை தொடர்பாக காணப்பட்ட பயம் நீங்கியுள்ளது. வானியல் குறித்த உண்மைகள் எம்மை வந்தடைந்துள்ளது. மேலும் புதிய கண்டுபிடிப்புகள், நோய்களுக்கான தீர்வுகள், அறிவியல்சார் முன்னேற்றம் யாவும் இதன் விளைவால் வந்ததே. இயந்திர பாவனையால் மனிதவாழ்க்கை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளும். தொழில்நுட்ப முறைகளும் அதிகமாக கையாளப்படுகிறது. அதுமட்டுமன்றி விஞ்ஞானத்தின் விந்தை கண்ட மனிதன் வானில் பறக்கும் பறவையினம் கண்டு விமானம் படைத்தான். அருவியில் ஓடும் மீனினம் கண்டு கடல்தாண்ட கப்பலையும் படைத்தான் மனித பாத அமைப்பைகொண்டு மதகின் பாலத்தையும் அமைத்துவிட்டான். வளர்க விஞ்ஞானம்.

ஆர். லுஷாந்தினி

புனித தோமையார் பெண்கள் பாடசாலை, மாத்தளை.


 

மனித வாழ்வில் நற்பண்புகள் விருத்தியடைய வேண்டும்

இன்று விஞ்ஞானம் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவருகிறது. அதற்கு எதிர்மாறாக நாகரீகம் எனும் மாயையில் மனிதனின் நற்பண்புகள் நாளுக்கு நாள் தேய்வடைந்து செல்கிறது. இதனால் சமூகம் சீரழிந்து போகிறது. ஏழையாயினும், பணக்காரனாயினும், படித்தவனாயினும், பாமரனாயினும் அவனிடத்தில் நற்பண்புகள் விருத்தியடைய வேண்டும். அப்போதுதான் சமூகம் அவனை மதிக்கும்.

முதலில் வீட்டிலிருந்தே நற்பண்புகளை ஆரம்பிக்க வேண்டும். பெற்றோர் தம் பிள்ளைகளிடம் மூத்தோருக்கு எவ்வாறு மரியாதை செய்ய வேண்டும். அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். பிற மதத்தவரை, பிற மதங்களை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டும். போன்ற நற்பண்புகளை வளர்க்க வேண்டும்.

அடுத்ததாகப் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நற்போதனைகள் வழங்க வேண்டும். பத்திரிகைகளில், புத்தகங்களில் வாசித்த நல்ல நல்ல அறிவுரைகளைக் கூற வேண்டும். பெரியார்களின் முன்மாதிரிக்கதைகள், சுயசரிதைகள், வரலாறுகள் என்பவற்றைக் கூறி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். தாமும் படித்தவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். ஏட்டுக் கல்வியாக இருக்கக் கூடாது. பெரியவர்களும், சிறியவர்களும் நல்லவற்றை வாசிக்க வேண்டும். இதனால் மனிதன் பல நற்பண்புகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பேற்படுகிறது.

ஒருவருக்கு நல்ல நண்பர் கிடைத்தாலும், நற்பண்புகள் வளரக் கூடியதாக இருக்கும். தீய வழியில் செல்லும் போது, அவற்றைத் தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்துவார். நல்லவற்றைச் செய்யும் போது பாராட்டுவதற்குத் தயக்கம் காட்டமாட்டார். கோபமோ, பொறாமையோ கொள்ளாது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்கமளிப்பார். தன் நண்பர் இல்லாதுவிடத்து, அவரைத் தூற்றும் நற்பண்பில்லாதவர்களை விட்டு விலகியிருப்பது சிறந்தது. இங்கிதம் தெரியாத நண்பர்களிடம் நற்பண்புகள் காணப்படாது.

சிலர் வீதியில் செல்லும் போது பண்புகளை மறந்துவிடுகின்றனர். தமக்கே வீதி சொந்தம் எனும் நினைவில் தோளுக்கு மேல் கைபோட்டுச் சிரித்துக் கும்மாளமடித்துப் பாதையை மறித்துச் செல்வர். இதனால் விபத்துக்கள் ஏற்படுவதுமல்லாமல், பலருக்கும் பயணம் செய்வதற்கு இடைஞ்சலாகவுமிருக்கும். கையடக்கத் தொலைப்பேசியில் தன்னை மறந்து சத்தமிட்டுச் செல்வர். இவைகளெல்லாம் அடுத்தவருக்கு எரிச்சலையூட்டும் பண்புகளாகவே அமையும், நற்பண்புள்ள பிள்ளைகள் வீதியில் பயணிக்கும் போது பொதுச் சொத்து எனக் கடைப்பிடிக்க வேண்டிய ப(வ)ழக்கங்களை பின்பற்றிச் செல்வார்கள்.

சிலர் தொழில் புரியுமிடத்தில் தலைக்கு மேல் வேலைகளை வைத்துக் கொண்டு அடுத்தவரைக் குறை கூறிக்கொண்டிருப்பர். நற்பண்புள்ளவர் தம் வேலைகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்துமுடிப்பர். இவர்கள் இப்படிப்பட்டவர் என்பதை மற்றவர் மதிப்பிட்டுக் கொள்வர். நற்பண்புள்ளவர். எப்போதும் எல்லோராலும் கெளரவிக்கப்பட்டுக்கொண்டே இருப்பர்.

எனவே சகோதரர்களே சிறுவயதிலிருந்தே நற்பண்புள்ளவர்களாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும். நம்பிக்கை, நாணயம், வாக்குமாறாமை, மரியாதை, நீதி, நேர்மை போன்ற நற்பண்புகள் மனிதரிடத்தில் காணப்பட வேண்டும். இதுவே வீ(நா)ட்டுக்கும் சிறந்ததாக அமையும்.

கிண்ணியா,

ஜெனீரா ஹைருல் அமான்.


கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரசுரிக்க ப்பட்ட இரு நத்தார் முத்திரைகளின் வெளியீடு கொழும்பு முகத்து வாரம் அளுத்மாவத்தையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவஸ் தானத் தில் நடைபெற்றபோது அறநெறிப் பாடசாலை மாணவர்கள் நிகழ்த்திய கரோல் இசைநிகழ்ச்சியைப் படத்தில் காணலாம்.


ஹபுகஸ்தலாவ ஜும்ஆப் பள்ளி வீதியில் அமைந்துள்ள அல் ஹஸ்னா பாடசாலை மாணவர்களது கைப்பணி கண்காட்சி அல் ஹஸ்னா பாலர் பாடசாலையில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம்.


கண்டி அசீஸா இஸ்லாமிய முன்பள்ளியின் இவ்வாண்டுக்கான விடுகை விழாவின் போது மாணவர்கள், அதிபர் திருமதி ஐ. ஹஸன் மற்றும் ஆசிரியர்களுடன் எடுத்துக் கொண்ட படம்.


நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘பொன் ஒழிச்சுடர் வரலாற்றுச் சுவடு 2013’ நிகழ்வில் ஆசிரியைகள் வரவேற்பு பாடல் இசைப்பதையும் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் நடனத்தையும் படங்களில் காணலாம்.


வெள்ளவத்தை, ஓரிபல் டிரஸ்ட் பாடசாலையின் வருடாந்த கலை விழாவின் போது, மாணவர்களின் கலை நிகழ்வுகளையும், பிரதம அதிதியாக வருகை தந்த, திருமதி பெனி ஜயவர்தன நம்பிக்கை பொறுப்பாளர்களான செல்வி. விக்னேஸ்வரி தம்பிப்பிள்ளை, திருமதி யாசோதா சிவகணேசசுந்தரம் ஆகியோரையும் படங்களில் காணலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]