நந்தன வருடம் மார்கழி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

ஹிஜ்ரி வருடம் 1433 சபர் பிறை 02

SUNDAY DECEMBER 23, 2012

Print

 
எம்.ஜி.ஆரின் புகழ் பரப்பிய காமினி பொன்சேகாவின் படம்!

எம்.ஜி.ஆரின் புகழ் பரப்பிய காமினி பொன்சேகாவின் படம்!

அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட படம்தான் ‘நீலக்கடலின் ஓரத்திலே”. இப்படம் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் வெளிவந்தது. தென்னிந்தியாவில் எமது சிங்கள நடிகர் காமினி பொன்சேகா (ஈழத்து எம்.ஜி.ஆர்) நடித்தது. எம்.ஜி.ஆர். புகழ்பாடும் படமே இது. இத்திரைப் படம் அன்று இலங் கையில் திரையிடப் பட்ட போது எம் சிங்கள சகோதர மொழிக் கலைஞர்க ளுக்கும் தமிழ்த்திரையு லகில் இடம் கிடைக்கும், இரு நாடுகளுக்கும் கலைப் பாலம் அமையும் எனப்பலர் ஊகித்தனர். ஏனோ ஏமாற்றம்தான் கிடைத்தது. இப்படம் தோல்வி கண்டது என்பது கசப்பான உண்மையே. இப்படி மேலும் எம் நாட்டுச் சிங்களக் கலைஞர்களுக்கு தமிழகத்தில் கலை உறவுப் பாலம் அமையும் நாள் எந்நாளோ?

இப்படத்தில் டைட்டில் “ஸ்ரீலங்காவின் நடிப்புலகச் சக்கரவர்த்தி காமினி பொன்சேகா” என கொட்டை எழுத்தில் காட்டப்பட்டது. தமிழகக் கேரளக் கரையோர மீனவர்களின் சேரிப்புற (குப்பத்து) கதைதான் இது. முன்பு முன்னணி நடிகையாகக் கொடிகட்டிப்பறந்த ஸ்ரீப்பிரியா இப்படத்தில் ஆண் வர்க்கத்தை வெறுத்து அல்லி ராணி வாழ்க்கை வாழும் முரட்டுப் பெண்ணாக வருகிறார். ஹிந்தி நடிகையான “தோரஹா” (அவள்) புகழ் நடிகை ராதா தலூஜா நடித்துள்ளார். இவர் எம்.ஜி.ஆருடன் “இதயக்கனி” எம்.ஜி.ஆரின் சிபாரிசின் பேரிலேயே ராதா தலூஜா இப்படத்தில் காமினியுடன் நடித்தார். காமினிக்கு ஸ்ரீப்பிரியா, ராதாதலூஜா என இரு நாயகிகள். எம்.ஜி.ஆரின் வில்லன் எம்.என். நம்பியார் காமினியுடன் மோதுகிறார். இப்படத்தில் எம்.ஜி.ஆரின் வலது கை எனப் புகழப்பட்ட தேங்காய் சீனிவாசன் “குடிக்காதே.. தம்பி குடிக்காதே...!” என்ற எம்.ஜி.ஆர் புகழ்பாடும் பாடலுக்கு வாய் அசைத்து நடித்தார். காமினி பொன் சேகாவுக்குப் பின்ன ணிக்குரல் கொடுத்தி ருப்பவர் எம்.ஜி.ஆரின் அதிக படங்களில் நடித்த அமரர் வீ. கோபாலகிருஷ்ணன். இவர் வில்லனாகவும் வருகிறார்.

இப்படத்தில் எம் சகோதரமொழிக்கலைஞர் காமினி பொன்சேகாவுக்கு இருபாடல் காட்சிகள் இரண்டு கனவுக் காட்சிப் பாடல்களே “நெருஞ்சி முள்ளே குறிஞ்சி மலர் ஆளதெப்போது” என்ற பாடலில் இங்கிதமான காதல் காட்சியில் நடித்துள்ளார். இவருக்குப் பின்னணி பாடல் ஜெயச்சந்திரன் கொடுத்துள்ளார். ‘நீலக் கடலின் ஓரத்திலே’ படத்தில் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களில் அடிகள் அடிக்கடி உச்சரிக்கப்படுகின்றன. ஒருகாட்சியில் பிலியட் ஆட்டத்தில் எம் நடிகர் வெளுத்து வாங்குகிறார். எம்.ஜி.ஆர் பாணியில் காமினி சண்டை போடுகிறார். படகுச் சண்டையில் தூள் கிளப்புகிறார் எம்.ஜி.இராமச்சந்திரனின் அதிக படங்களுக்குச் சண்டைப்பயிற்சி கொடுத்த சியாம் சுந்தர். இவரே இப்படத்திற்கும் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்தார். கடைசிச் சண்டைக் காட்சியில் சாட்சாத் எம்.ஜி.ஆர் போல கோட்டும் தொப்பியுமாக காமினி வருகிறார். தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் போது ஒருசில காட்சிகள் தணிக்கை சபையினரால் நீக்கப்பட்டுள்ளன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஒருபடத்தைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தினார் எம் சிங்களக்கலைஞர் ஸ்ரீலங்காவின் நடிப்புலகச்சக்கரவர்த்தி காமினி பொன்சேகா!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]