நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
கண்டியில் கறுப்புப்பட்டி அணிந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கண்டியில் கறுப்புப்பட்டி அணிந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

EPF, ETF வழங்கலில் இழுத்தடிப்பு நிலை;

13 நாட்களாகியும் கண்டுகொள்ளாத நிர்வாகம்

கண்டி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிளான்டேசன் ஆகிய பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30 பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் சுமார் 700க்கு மேற்பட்ட தோட்ட உத்தியோகஸ்தர்கள் கடந்த (23.10.12) முதல் கறுப்புப்பட்டி அணிந்து அமைதியான முறையில் பணியில் ஈடு பட்டு எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித் துள்ளனர். போராட்டம் 13வது நாளாக தொடர் கிறது. இதுவரைக்கும் எந்த நிறுவனமும் இவர்களின் குறைப்பாடு களைப்பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்வர வில்லை.

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம் பிக்கை நிதியம், சேவைக்கால கொடுப்பனவு கள் ஒழுங்காக வழங்கப்படாது இழுத்தடிப் புச் செய்யப்பட்டுவருகின்றமைக்கு எதிர்ப் புத் தெரிவிக்கும் வகையிலேயே தோட்ட உத்தியோகஸ்தர்கள் இந்த கறுப்புப்பட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாத்தளை, கண்டி, நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 பெருந்தோட் டங்களில் வேலை செய்யும் உத்தியோகஸ் தர்களே இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கை சம்பந்தமாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத் தின் முக்கியஸ்தர்கள் பல தடவை சம்பந் தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதும் அவை வெற்றியளிக்க வில்லை என சங்கத்தின் தலைவர் தம்பிக்க ஜயவர்தன கூறியதுடன் அதனாலே இந்த அமைதியான எதிர்ப்பு கறுப்புப்பட்டி போராட்டத்தை உத்தி யோகஸ்தர்கள் ஆரம்பித்துள்ளனர் என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]