நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
பேருவளையில் தையல் கண்காட்சி

பேருவளையில் தையல் கண்காட்சி

யும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

பேருவளை மாளிகா ஹேனை நஸ¥ஹா பவுண்டேசனின் ஏற்பாட்டில் தையல் கண்காட்சி மற்றும் 6 மாதகால தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த

 யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமும் மாளிகாஹேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நஸ¥ஹா பவுண்டேசன் ஸ்தாபகர் இஜ்லான் யூஸ்ட் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் தையல் பயிற்சியை பூர்த்திசெய்த 25 யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பேருவளை பிரசேத உதவிச் செயலாளர் எம்.ஜயசிங்க,பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ச, மாளிகாஹேனை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம். இஸட் எம். அஷ்ரப், நகரசபை உறுப்பினர் காமினி அல்விஸ், டொக்டர் எம்.ஆர். பஸியுல்லிஸான் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

ஜாமியா நZமியா கலாபீட விரிவுரையாளர் அஷ்செய்க் அரபாத் கரீம் (நZமி) விசேட பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இஜ்லான் யூஸ¥ப் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். நஸ¥ஹா பவுண்டேசன் முதல் கட்டமாக 25 யுவதிகளை தெரிவு செய்து 6 மாத கால தையல் பயிற்சியை இலவசமாக பெற்றுக்கொடுத்துள்ளதுடன் இரண்டாம் கட்டமாக 45 பேருக்கு பயிற்சியும் வழங்கப்படவுள்ளன.

கல்வி, சமய, தொழில், சமூக, ஆன்மீகப் பணிகளுக்கு இவ்வமைப்பு மூலம் உதவி செய்யக்கிடைத்துள்ளமை குறித்து நஸ¥ஹாபவுண்டேசன் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]