நந்தன வருடம் ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 18
SUNDAY NOVEMBER 04, 2012

Print

 
கம்சின்ஸ் ஆரம்பித்துள்ள புதிய மணமக்கள் ஆடையகம்

கம்சின்ஸ் ஆரம்பித்துள்ள புதிய மணமக்கள் ஆடையகம்

இலங்கையின் முன்னணி ஆடையலங்கார நிலையமாக விளங்கும் கம்சின்ஸ், மணமக்களுக்கென பிரத்தியேக ஆடையகம் ஒன்றை அண்மையில் திறந்துள்ளது. இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களினால் வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய அறிமுகங்கள் நம்நாட்டு மணமக்களின் அழகைப் பன்மடங்கு அதிகரிக்கிறது. வெள்ளவத்தையில் அமையப்பெற்ற இந்த விசேட மணமக்கள் பிரிவில் மணமகளுக்கான லெஹங்கா, சோளி வகைகள், ஷாராரா ஆடைகள் முதலியவை கண்ணைக் கவரும் நவீன டிசைன்களில் பல வித வர்ணங்களில் கிடைக்கின்றன.

இது மட்டுமன்றி மணமகனுக்கான ஷர்வானி, குர்தா வகைகளும் அவர்களின் தனிப்பட்ட பாணியையும் இரசனையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இந்த வரிசையில் இந்தியாவின் அனைத்து பாகங்களிலுமிருந்து தருவிக்கப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட நவீன டிசைன் சேலைகள் மற்றும் சல்வார்களையும் மேலதிகமாகக் கம்சின்ஸ் தருவித்துள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய டிசைன்களை பொருட்பட்டியல் மூலம் இலங்கையில் உடனுக்குடன் அறிமுகம் செய்யும் பாணியைக் கம்சின்ஸ் கையாள்வதால் வாடிக்கையாளர்கள் இலகுவான முறையில் தம்முடைய சரியான தெரிவை மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது. கையால் நெய்யப்பட்ட புடவைகள் மற்றும் சல்வார் வகைகள் முதல் ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல தெரிவுகளை கம்சின்ஸ் கொண்டுள்ளது.

பெண்களின் விருப்பத் தெரிவான எம்ப்ரோய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட புடவைகளும் சல்வார்களும் வானவில் வர்ணங்களில் சம்சினில் கிடைக்கின்றன. கம்சின்ஸ் ஆடைகள் அனைத்தும் தூய பட்டில் கற்கள், சீக்குயின்ஸ், மணிகள் பொருத்தப்பட்டு எம்ரோய்டரி வேலைப்பாடும் செய்யப்பட்டுள்ளன. ஆடைகள் மட்டுமன்றி நீங்கள் தெரிவு செய்யும் ஆடைகளுக்குப் பொருத்தமான சகல அணிகலன்களையும் ஒரே இடத்தில் கம்சினில் பெற்றுக்கொள்ள முடிவதால் பூரணமான ஷொப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் ரசிக்க முடிகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]