நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
மத்திய மாகாண தமிழ்க்கல்வி மேம்பாட்டுக்கு மலையக பாடசாலைகளின் பங்களிப்பு அவசியம்

மத்திய மாகாண தமிழ்க்கல்வி மேம்பாட்டுக்கு மலையக பாடசாலைகளின் பங்களிப்பு அவசியம்

மத்திய மகாண கல்வியமைச்சின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் கல்விப் பெறுபேறுகளையும் மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகள் உள்ளிட்ட சகல அங்கங்களிலும் மேம்பாடடையச் செய்வதற்காக “நெனோதா” எனும் பெயரில் சுமார் 35 செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை வெளிக்கொணர்ந்து பொருத்தமான களமொன்றை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் மத்திய மாகாண கல்வித் திணைக்களம் பிளேன் ஸ்ரீ லங்கா நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாக மத்திய மாகாண “மகரத்மல” ணிaharathசீal பாடசாலை ஊடக விருது வழங்கும் வைபவத்தை கண்டி மகமாயா பெண்கள் பாடசாலையில் வெகுவிமர்சையாக நடந்தன.

செய்தி, வாசிப்பு, காலை ஒலிபரப்பு, நகைச்சுவை, நாடகப் போட்டி, செய்திப்பத்திரிகை ஆக்கம், புகைப்படப்போட்டி உட்பட ஊடக்துறையில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் பல்வேறு போட்டிகள் பாடசாலை மட்டத்திலும், வலய மட்டத்திலும் நடத்தப்பட்துடன் மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிங்களப் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதல் உணர்வுபூர்வமானதாகவும், உற்சாகமானதாகவும் காணப்பட்டது. ஆனால் இவ்விழாவில் தமிழ்ப்பாடசாலைகளின் பங்குபற்றுதல் என்பது குறைவாகவே காணப்பட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய பாடசாலைகளே மத்திய மாகாணம் முழுவதுலிருந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றி விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டன.

இந்நிகழ்வுகள் தொடர்பான சுற்று நிருபம் தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் பல பாடசாலைகள் இவ்விடயத்தில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்ப்பாடசாலைகள் நிகழ்வுகளில் ஆர்வத்தோடு பங்குபற்றுவது அவசியம் இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்ப் பாடசாலை அதிபர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளின் கல்விப் பெறுபேறுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற பொதுவான கருத்து சகல மட்டங்களிலும் நிலவுகிறது.

தமிழ்ப் பாடசாலைகளுக்கு கிடைக்கப் பெறுகின்ற வளங்களிலும், வாய்ப்புகளிலும் குறைபாடுகள் நிலவுகின்றபோதும் பங்குபற்றுதல்கள் அதிகரிக்கப்படும் போது இவ்வாறான குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட வாய்ப்புண்டு.

தமிழ் மாணவர்களின் உணர்வு பூர்வமான பங்கேற்பு சகல துறைகளிலும் அதிகரிக் கப்பட வேண்டும் என்பதே நிகழ்வில் பங்கேற்றவர் பலரின் கருத்தாக இருந்தது.

புசல்லாவை நவநீதன்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]