புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
செய்யும் தொழிலே தெய்வம்! திறமைதான் நமது செல்வம்!

செய்யும் தொழிலே தெய்வம்! திறமைதான் நமது செல்வம்!

முக்கியமான ஒரு வைபவத்தைத் தவற விட்டுவிட்டேன். தினகரன் வாரமஞ்சரி வாசகர் வட்டம் ஹட்டன், நோட்டன் பிரிட்ஜில் ஆரம்பிக்கப்பட்ட முதலா மாண்டு நிறைவை மிகக் கோலாகலமாக கடந்த வியாழக்கிழமை (18) நடத்தியிருக் கிறார்கள். தற்போது ஆற அமர கிழக்கு மாகாணத்தில் நிற்பதால், துரதிர்ஷ்ட வசமாக அங்குப் போக முடியவில்லை. பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர், செய்தி ஆசிரியர் முதலானோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த வைபவத்திற்கு வந்திருந்த ஆசிரிய குழாம், ஆற அமர பகுதியைப் பற்றிப் பிரஸ்தாபித்துக் கேள் விக் கணைகளைத் தொடுத்ததாக இருவ ரும் சொன்னார்கள். அவர்கள் என்னிடம் சில விடயங்களைக் கேட்கும்போது 'மகிழுந்து நகலில்' சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவம் பற்றி அறிந்துகொண்டதைச் சொன்னேன். ஆனால், ஆற அமர ஆராயுமாறு கூறி விட்டார்கள். வைபவத்திற்கு வந்திருந்தால், கேள்வி தொடுத்தவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாம். சரி எதற்கும் பொறுத்திருங்கள்.

கடந்த புதன்கிழமை (17) திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை யின் நீண்ட பாலமென்ற பெருமையைப் பெற்றுக்கொண்டதாக 'கிண்'ணாரமடிக்கும் அந்தக் கிராமத்தின் 'மத்தி'யில் உள்ள பாடசாலையில் அருமையான ஒரு விழாவொன்றும் நடைபெற்றது. தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த முறையில் வெற்றியீட்டியவர்கள், தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்ட இந்த விழாவில் முதன்மையான பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பார்ப்ப தற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், சற்று உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தால் தலை சுற்றுகிறது. ஏன்? என்று கேட்பீர்கள் இல்லையா?

நூறு சதுர கணித்தற்போட்டியில் வெற்றி யீட்டிய மாணவர்களும் இந்த விழாவில் பாராட்டப்பட்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னிலையில் இருந்த ஒரு மாணவனைப் பின் தள்ளிவிட்டு, மிகவும் பின்னிலையில் தெரிவான ஓர் அதிகாரியின் பிள்ளையை முன்னிலைக்குக் கொண்டுவந்து பாராட்டி யிருக்கிறார்கள். உறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி, பிரமுகர்கள் முன்னிலை யில் தம் பிள்ளைக்குப் பாராட்டைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் குறித்த அந்த உயர் அதிகாரி இந்தச் சிறிய வேலையைச் செய்ததாகச் சொல்கிறார்கள் பெற்றோர்கள். இதற்குச் சில ஆசிரியர்க ளும் துணை போய் இருக்கிறார்கள். அவர்கள்தான் அதிகாரியின் பிள்ளை பிரமுகர்களிடம் சான்றிதழ் பெறுவதற்கான ஒழுங்குகளைச் செய்திருக்கிறார்கள். பிறகு இதனை பிராந்தியத்தில் செயற்படும் ஒரு செய்தியாளரின் அனுசரணையுடன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பியிருக்கி றார்கள். இதனைப் பார்க்கும்போது உண் மையில் முன்னிலையில் வெற்றிபெற்ற மாணவனின் மனது என்ன பாடுபட்டி ருக்கும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

எங்களதுதான் பெரிய பாலம் என்று கிண்ணாரமடிக்கும் இந்தக் கிராம மக்கள், அதிகாரிகள்தான் சிறியவர்களாக இருக் கிறார்கள் என்கிறார்கள். இந்தக் கல்வி வலயத்தின் 'மத்தி'யில் உள்ள பாடசாலை யில் அண்மைக்காலமாக நடைபெறும் திட்டமிட்ட அநீதிகளையும் புட்டு வைக்கி றார்கள். அதாவது கல்விக்கரசனான அந்த அதிகாரியின் பிள்ளைக்கு பாடசாலை தவணைப் பரீட்சைகளிலும் இலையான் விரட்டுவதற்குச் சலுகை கிடைத்திருக் கிறது. அதற்குப் பக்கத்துணையாகச் சில ஆசிரியர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையிலும் இந்த 'ஃபேவரிசம்' காட்டப்பட்டிருக்கிறது. இது பரீட்சைப் பெறுபேற்றிலும் தாக்கத்தினை ஏற்படுத்தி யிருக்கிறது. இதனை வேண்டுமானால் அதிகாரியின் கெட்டித்தனம் என்று வைத்துக்கொள்ளலாம். இதனைக்கூடச் செய்ய முடியாவிட்டால் பதவியில் இருந்து என்ன பிரயோசனம் என்று அவர் நினைக்கக்கூடும். நல்ல நினைப்பு. ஆனால், திறமையாக வெற்றி பெற்ற மாணவர்களைப் பின்தள்ளி அமர்த்தி விட்டுத் தம் பிள்ளைக்குப் பெருமை தேடுவது உங்களுக்கே கூச்சமாக இல்லையா? என்பதுதான் எமது கேள்வி.

செய்யும் தொழிலே தெய்வம். திறமைதான் நமது செல்வம் என்பார்கள். நீங்கள் தொழிலை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளுங்கள். நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று உங்களுக்கல்லவா தெரியும். குற்றம் காணும் அல்லது குறை காணுவோருக்கு உங்கள் சூட்சுமம் தெரிய வேண்டும் என்றில்லைதானே... நீங்கள் உங்கள் பதவியில் உள்ள ஆங்கில முதல் எழுத்தை இல்லாது செய்துகொள்வதற்கு எதனையும் செய்யுங்கள். பரவாயில்லை. ஆனால், மாணாக்கர் விடயத்திலாவது யோக்கியத்தைக் கடைப்பிடியுங்கள். பெற் றோர்களுக்கு உங்கள் நேர்மையில் சந்தேகம் எழுந்துவிட்டதால், தமது பிள்ளைகளுக்கு வேறு பாடசாலைகளைத் தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாருங்கள், நீங்கள் அலுவலகத்தில் இருந்து செய்யும் வேலையால், பாட சாலையின் பெயரும் அங்குக் கற்பிக்கும் ஆசிரியர்களின் பெயரும் அல்லவா களங்கப்படுகிறது. அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாவிட்டாலும், உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். அவரை இப்போது வேண்டுமானால் ஆசிரியர்களின் உதவி யுடன் இலையான் துரத்தச் சொல்லலாம். சாதாரண தரம், உயர் தரம் போன்ற வற்றில் என்ன செய்வீர்கள். போங்கள் நான் யார்? அதிலும் என் கைவண்ணத் தைக் காண்பிப்பேன் என்றுகூடச் சொல் வீர்கள். போகட்டும் ஏழைப் பிள்ளைக ளின் மடியில் கைவைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவே. ஏனென்றால் ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்பார்கள்.

இந்தக் கல்வி வலயத்திற்குப் புதிதாக வந்திருக்கும் பணிப்பாளர் அவர்கள் மனசாட்சியுடன் செயற்படுபவர் என அறிந்தோம்.

அவர் இவ்வாறான கறைகளைக் களைவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். என்னதான் நடக்கும் என்பதை நாமும் ஆற அமர காத்திருக்கிறோம். தேவைப்படின் சில விடயங்களைப் பெயர் விபரங்களுடன் உரிய ஆதாரங்களுடன் உங்களுக்குப் பெற்றுத்தருகிறோம். முதலில் உங்களுடன் பணியாற்றும் ஆங்கில முதல் எழுத்தை யும் நான்காம் எழுத்தையும் கவனியுங் கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.