புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
ஏடாகூடமான கேள்விகள் ?

ஏடாகூடமான கேள்விகள் ?

ஏடாகூடம் : மொழி

 

சிரேஷ்ட ஊடகவியலாளர், சூரியன் எப்.எம் ஆலோசகர் நடராஜசிவம்

கேள்வி: நீங்கள் வெறும் நடராஜ சிவமா தில்லையில் நடனமாடும் நடராஜ சிவமா?

பதில்: வெறும் நடராஜசிவமாக இருக்க முடியாது. ஏன் என்றால் என் அடையாள அட்டையில் நடராஜசிவத்திற்கு முன் ‘சி’ என்ற எழுத்து இருக்கிறது. மற்றும் நான் தில்லையில் நடனமாடியதில்லை. அங்கு யாரும் என்னை அழைத்ததில்லை. என் வீட்டுக்கொல்லையில் நடனமாடியிருக்கிறேன், உடல் பயிற்சி செய்யும்பொழுது.

(ஓ........ அதனால்தான் உடல் இப்படி மான் கொம்பு போல் இருக்கிறதோ........?)

கேள்வி: ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற கல்லூரிக்கு உங்களை ஆலோசகராக இருக்க அழைத்தால் வருவீர்களா?

பதில்: ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற கல்லூரிக்கு ஆலோசகரென்ன, அதிபராகவே இருக்க அழைத்தால் மட்டுமல்ல அழைக்காமலே வருவேன். சொதப்புவது அப்படி ஒன்றும் லேசான காரியமல்ல. அதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். நான் அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதுவேன்.

(கேளுங்கப்பா..... கேளுங்கப்பா.......... பிண்ணுறாரு)

கேள்வி: உங்களுக்கு ஏன் இன்னும் ‘முது’ கலைஞர் விருது கிடைக்கவில்லை. பேரம் பேச யாரும் வரவில்லையா?

பதில்: ஏன் என்றால் நான் இன்னும் ஒருவருக்கும் முதுகு சொறிய போகவில்லை. பேரம்பேச யாரும் இருந்தால் அனுப்பிவையுங்கள் பாவம் பிழைத்து கொள்ளட்டும்.

(முதுகெலும்புள்ள முதுகலைஞர் வாழ்க..... வளர்க.....)

கேள்வி: காதலிப்பது சுகமா? காதலிப்பவர்களை பார்த்து ரசிப்பது சுகமா?

பதில்: காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி..... என்ற அந்தவகையான ஆன்மீக காதலை சொல்கிaர்களா? அல்லது ஒரே குடைக்குள் குந்திக்கொண்டு கூத்தாடும் அந்த காதலை சொல்கிaர்களா? ஒன்று நித்திய பேரானந்த சுகம் மற்றதுதான் உமக்குத் தெரியுமே.....

(வாத்தியாரே......... உங்களோடு சேர்ந்துகொண்ட பிறகு கற்றுக்கொண்ட பாடம் தானே அது ஹி....ஹி...ஹி....)

கேள்வி: எழுபது வயது முதுமகள் ஒருவர் உங்களைப் பார்த்து “நடா ஐ லவ் யூ டா” என்று சொன்னால் உங்கள் ரிஎக்ஷன் எப்படி இருக்கும்?

பதில்: முதுமகள் எப்பொழுது இளமகனைத்தான் தேடி “ஐ லவ் யூ” சொல்லுவார்கள் என்று இப்ப வரும் செய்தித்தாள்களில் நீங்கள் படித்ததில்லையா? அதுதானே இப்பத்தைய தலைப்புச் செய்திகள். நீங்கள் விறுவிறுப்பாக எழுதும் செய்திகள்.

(உங்கள் ‘ரிஎக்ஷன்’ எப்படி இருக்கும் என்றுதானே கேட்டேன்..... நீங்கள் பைலா அல்லவா பாடுகிaர்கள்)

கேள்வி: கன்னிப் பெண்கள் சேர்ந்து ஆரம்பிக்க போகும் ஒரு கட்சிக்கு உங்களை தலைவராகப் போட்டால் முகம் மலர்ந்து ஏற்றுக்கொள்வீர்களா அல்லது பின்னங்கால் பிடறியில் பட ஓடுவீர்களா?

பதில்: அது வந்து கன்னிப்பெண்கள் சேர்ந்து ஆரம்பிக்கும் கட்சியின் கொள்கையை பொறுத்தது. அடுத்தது கட்சியின் நிதி நிலையைப் பொறுத்தது. எது எப்படி இருந்தாலும் என் பர்சை (ஜிursலீ) நான் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்.

(ஆமாம் நீங்கள் ஓசியில்தான் எல்லா காரியங்களையும் செய்வீர்கள் என்று ராசியான உங்கள் நண்பர் சொன்னார்)

கேள்வி: ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டும் என்று சொல்லுவார்கள். நீங்கள் அறிவிப்பாளராக வருவதற்காக எதை எல்லாம் இழந்தீர்கள்?

பதில்: நடிகன் நடராஜசிவம் என்ற பெயரை இழந்து அறிவிப்பாளர் நடராஜசிவம் என்ற பெயரைப் பெற்றேன். நான் அறிவிப்பாளராவதற்கு முன் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்த அந்த அற்புதமான சந்தோஷமான நாட்களை இப்போதும் நினைத்துப்பார்க்கிறேன். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்.

(சூடாக ஏதாவது சொல்வீர்கள் என்று பார்த்தால் கூலாக சொல்லி நழுவி விட்டீர்களே...)

கேள்வி: சில சமயங்களில் வீட்டிற்குள்ளும் நீங்கள் ‘சிவதாண்டவம்’ ஆடுவதாக பக்கத்து வீட்டு ஆன்டி சொல்லுகிறாரே....உண்மையா?

பதில்: ணிr. மொழி நான் உங்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். கேளுங்கள். எப்பொழுதும் பக்கத்துவீட்டு ஆண்டிமாருடன் அதிகம் கதை வைத்துக்கொள்ளாதீர்கள். அப்புறம் அவர்கள் தாண்டியா ஆட்டமாடி உங்களை ஆண்டியாக்கி விடுவார்கள். பிறகு நீங்கள் போண்டியாய் திரிய வேண்டியதுதான்.

(நன்றி தலைவா, உங்களைப் போன்ற அனுபவசாலிகள் சொல்லும் போது கேட்காமல் இருக்க முடியுமா?)

கேள்வி: நீங்கள் சிங்கள நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது உயரமான சிங்கள நடிகைக்கும் உங்களுக் குமிடையில் ‘சம்திங்..... சம்திங்’ என்று கிசுகிசு வந்ததே..... அது பிசுபிசுத்து விட்டதா அல்லது..........?

பதில்: ஏன் ஐயா இன ஒற்றுமையுடன் சகலரும் வாழும் இந்த அருமையான நாட்டில் இனப்பிரச்சினையை கிளப்பிவிட பார்க்கிaங்க. பேசாமல் உம் பிடறியை பாதுகாத்துக்கொண்டு ஒழுங்காக கேள்விகளை எழுதி பிழைக்கும் வழியைப் பாரும்...

(தலைவா, ரப்பர் மரத்திற்கு ரணங்களைப் பற்றி கவலை இல்லை.... கிசுகிசு உண்மை என்று ஒப்புக்கொண்டதுக்கு நன்றி)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.