புத் 64 இல. 43

நந்தன வருடம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்ஹஜ் பிறை 05

SUNDAY OCTOBER 21 2012

 
சுயரூபக் கோவை

சுயரூபக் கோவை

பெயர்: தனியார் தமிழ்ப் பத்திரிகைகள்

வயது: தமிழ்த் தேசியம் இருக்கும்வரை பதினாறு

தொழில்: ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை விமர்சிப்பது

உண்மையான தொழில்: முன்னர் புலிக்கு இப் போது தமிழ்க் கூட்டமைப்பிற்கு துதி பாடுவது

சைட் பிஸினஸ்: அளவுக்கு அதிகமாக அச்சுப் பத்திரிகை இறக்குமதி

வருமானம்: மரண அறிவித்தல், ஆண்டு நினைவஞ்சலி, ஆலய திருவிழாக்கள்

பொழுதுபோக்கு: பத்திரிகையை வைத்து அரசியல் நடத்துவது

அதிகம் இரசிப்பது: தமது செய்திகளைப் பார்த்து மக்கள் ரசித்து பின்னர் ஏமாறுவது

அசைக்க முடியாத பலம்: தமிழ் மக்களுக்கே உரித்தான வாசிப்புப் பழக்கம்

அசைக்கக் கூடிய பலம்: இன்னொரு தரமான தனியார் பத்திரிகை வெளிவருவது

எதிர்பார்ப்பு: புலிகளை அழித்தது போன்று தமிழ்ச் சமூகத்தையும் அழிப்பது

நண்பர்கள்: தமது போலியை திறமை எனப் புகழும் பென்சன்காரர்

எதிரிகள்: எவருமே இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனம்

மறந்தது: ஊடகத் துறைக்குரிய பத்திரிகா தர்மம்

மறக்காதது: கோர்த்து விடுதல், பிரிவினையை ஏற்படுத்துதல்

ஏக்கம்: தரமான செய்தி இணையத்தளங்களின் வருகை

தவறவிட்டது: இறுதி யுத்தத்தில் மரணமான பொதுமக்களின் மரண அறிவித்தல் விளம்பரங்கள்

நிறைவேறாதிருக்கும் ஆசை: சந்திர மண்டலத்திற்கும் பத்திரிகை அனுப்புவது

நிறைவேறிய ஆசை: போட்டியாளர்களை வளைத்துப் போட்டமை

மிகவும் பிடித்தது: முழுப்பக்க வர்ண விளம்பரங்கள்

சாதனை: வேலுப்பிள்ளை பிரபாகரனை அழித்தமை

அதிக மரியாதை வைத்திருப்பது: அரச பத்திரிகைகள் மீது

மனம் வெதும்பிய சந்தர்ப்பம்: மதுபான வகை விளம் பரங்களை அரசு தடை செய்தமை

எதிர்கால இலட்சியம்: பொய்களைக் கூறி நம்பர் வன் ஆக இருப்பது போன்ற மாயை

கோபம் கொள்வது: தமது பொட்டுக்கட்டுகளை ஏனைய ஊடகங்கள் விமர்சிப்பது

எதிர்பாத்துக் கொண்டிருப்பது: தமிழ் மக்கள் தொடர்ந்தும் மூடர்களாக இருப்பதை

குலை நடுங்கும் சம்பவம்: ஆங்கில கண்ணாடி பத்திரிகை தமிழிலும் வருமெனும் அறிவித்தல்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.