நந்தன வருடம் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 27
SUNDAY OCTOBER 14, 2012

Print

 
‘திவிநெகும’

‘திவிநெகும’

இலங்கையின் அரசியல் அமைப்பைபோன்று உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் சட்டம் ஆகியன அவ்வவ்போது தேவைக்கேற்றவாறு உட்புகுத்துகைகள், சேர்க்கைகள், திருத்தங்கள், மாற்aடுகள் போன்றவற்றை கண்டு வந்துள்ளன. நிறங்களும், ஆட்களும் மாறுகின்றபோது சட்டங்களும் திட்டங்களும் மாறுகின்ற வரலாறு இலங்கைக்குண்டு. அந்தவகையில் சிறப்பான முறைமைகளும் வழக்கொழிந்து போகலாம். அற்புதமானதும், ஆரோக்கியமானதுமான முறைமைகளும் அறிமுகமாகலாம்.

பிரதேச சபைகள் முறைமை அறிமுகப்படுதப்படுவதற்கு முன்பு இருந்த கிராம சபைகள் முறைமையை வழக்கொழியச்செய்ததன் மூலம் குட்டி சபைகள் என்றில்லாமல் அதற்கு ஒரு பெரிய வடிவம் கொடுத்தல், சபைகளின் பரப்பெல்லைகளை அதிகரிப்பதன்மூலம் அதற்கு மகிமையை உண்டு பண்ணுதல் என்ற போர்வையில் அன்று துறைக்குப்பொறுப்பாக இருந்த அமைச்சரும் காலஞ்சென்ற ஜனாதிபதியுமான ஆர். பிரேமதாஸ வியாக்கியான மளித்து பிரதேச சபைகளைத் தோற்றுவித்தார். அதன் காரணமாக நகர சபைகளாக இருந்து வந்த சில சபைகளும் பிரதேச சபைகளாக மாற்றம் கண்டன.
சிறுபான்மை கட்சிகளுக்கு மாத்திரமின்றி கம்மியூனிஸ்ட்கட்சி, ஜாதிக்க ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கும் சவாலாக அமையலாம். தமிழ்கூட்டமைப்பு, மு.கா, இ.தொ.கா போன்ற கட்சிகளும் தாங்கள் வாக்குகளால் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களில் தொடர்ந்து ஆசனங்களை வெல்லக்கூடியதாக இருக்கும்.

ஒரு பெரிய அதிகாரம் கொண்டதல்ல என்றாலும் கிராமிய, நகர மட்டத்தில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசியல் அடிப்படைக்கட்டமைப்பில் உள்ளூர் உறுப்பினர்களை கொண்டமையக்கூடிய மக்கள் மன்றம் போன்ற பிரமையுண்டு. விருப்பு வாக்கு முறைமையை இல்லாதொழித்தல், தேர்தல் முறைமையை மாற்றுதல் என்ற இரு பிரதான அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதாக சமகாலத்தில் புதிய உள்ளூரதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமும், உள்ளூரதிகார தேர்தல் சட்டமும் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் கண்டுள்ளன. முன்பதாக வாதப்பிரதிவாதங்கள் இருந்தன. கட்சிகளால் சிற்சில திருத்தங்களும் ஏற்கனவே முன்மொழியப்பட்டிருந்தன. கடைசியாக இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையே புதிய முறைமைகளின் கீழ் நடத்தலாம் என்ற உத்தேசம் அரசாங்கத்துக்கு இருந்தது.

ஆனால்அது சாத்தியப்படவில்லை. போதியகால அவகாசமின்மை முன்னெடுப்புகளில் காணப்பட்டதடங்கல், கோரிக்கைள் போன்ற காரணங்களின் அடிப்படையில் முயற்சி நின்று போனது என்றாலும் 2010 ஆரம்பகாலம் தொட்டே தொடர்ந்தேர்ச்சையாக எடுக்கப்பட்டு வந்த முயற்சியின் விளைவாக 2010 ஒக்டோபர் 04ம் திகதி வர்த்தமானியிலும் சட்டமூலம் பிரசுரமானது. அதேமாதம் 21ம் திகதி துறைக்குப் பொறுப்பான அமைச்சரால் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐ.தே.க. வின் ஆதரவோடு வாக்கெடுப்பும் இன்றி நிறைவேறியுள்ளது. அரசியல் யாப்பின் 17வது திருத்தப்படியாக அமைந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் சட்ட மூலமும் ஏகோபித்த அடிப்படையில் நிறைவேறியமை நினைவுக்கு வருகிறது.

ஒருகால கட்டத்தில் முதன்மைச்சட்டவாக்கத்தில் கூட காலத்துக்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகள், ஷரத்துகள். வாசகங்கள் இல்லாதிருந்தமை - உள்ளூர் அதிகார சபைகள் மற்றும் தேர்தல்கள் சட்டங்களை திருத்திக் கொண்டிருக்கவேண்டிய தருணங்கள் இருந்தன. தேசிய நலனுக்கு அவசரமானதென அமைச்சரவை கருதியும் 2002 காலப்பகுதியில் திருத்தப்பட்ட சந்தர்ப்பமுண்டு.

அந்த வகையில் ஏதாவது இக்கட்டு நிலை தோன்றி அறிவிக்கப்பட்ட தேதியன்று வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனால் யாது செய்வது என்ற உரிய சட்ட ஒழுங்கு இருக்கவில்லை அதற்காக திருத்தம் மேற்கொள்ளவேண்டியிருந்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடப்பரப்பொன்றில் அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுப்பத்திரத்தில் காணப்படுகின்ற பெயர்களையுடைய சகலரும் ராஜினாமா செய்துவிட்டாலும் புதியவர்களை பிரேரித்து நியமனமாக்கும் ஏற்பாடு இருந்திராததால் தாய்ச்சட்டத்துக்கு 2007ம் ஆண்டின் 16ம் இலக்க உள்ளூரதிகார சபைத்தேர்தல்கள் திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

எதிர்பாராத விதமாக தேர்தல்கள் பிற்போடப்பட்டால் புதிதாக நியமனப்பத்திரங்களை கோருவதற்கு சட்ட ஏற்பாடு இருக்கவில்லை. நீண்டகாலத்துக்கு அவசர சூழ்நிலைகள் காரணமாக ஒத்திவைக்கப்படின் இறப்பு புலம்பெயர்வு, கட்சிமாறுகை, வெளிநாடுபயணம், முப்பத்தைந்து வயதுக்குரியோர் அதனைத் தாண்டிவிடுகின்றமை போன்ற காரணங்களால் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களை பயனற்றதாக்கி புதிதாக நியமனப்பத்திரங்களைத்தாக்கல் செய்யும் வகையாக 2007ம் ஆண்டின் 30ம் இலக்க உள்ளூரதிகாரசபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது குறிப்பாக, மட்டக்களப்பு மாநகரசபை உட்பட எட்டு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களைக் கோர வழிசெய்தது.

இதே போன்று காலத்துக்குக் காலம் தள்ளிப் போடப்பட்டு வந்தாலும் அதே காரணங்களை அடிப்படையாகக் கொண்டதுமான யாழ் மாநகரசபை ஐந்து நகரசபைகள், 27 பிரதேசசபைகள் போன்வற்றுக்கே மீளவும் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்யக்கோரும் அறிவிப்புக்காக 2007ம் ஆண்டின் 55ம் இலக்க உள்ளூரதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவரையில் பச்சிலைப்பள்ளி, கரைச்சி போன்ற பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட சட்டமூலமானது மாநகரசபைகள் கட்டளைச்சட்டம், நகரசபைகள் கட்டளைச்சட்டம், மற்றும் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் போன்வற்றை திருத்தத்துக்குள்ளாக்கி குறித்த சபைகளின் அமைப்புகளில் தீர்க்கமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.

புதிய சட்டத்திருத்தங்களின் மூலம் விபரீதங்களும் விசித்திரமும் நிறைந்த விகிதாசாரத் தேர்தல் முறை மாற்றங்காண்பதை அறிந்து கொண்டிருக்கிறோம். புதிய முறை சமத்துவமான தடங்கலற்ற தேர்தல் பெறுபேற்று நடவடிக்கைகளுக்கு வித்திடும் என்பது அரசாங்கத்தின் கருத்தாகும். எதிரணிகள் ஏகோபித்து வாக்கெடுப்பின்றி அங்கீகரித்துள்ளமை அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளமைக்கு சான்றாகும்.

விருப்பு வாக்குமுறைமை பொதுமக்களாலும் அரசியல் வாதிகளாலும் கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக விமர்சிக்கப்பட்டு வந்தமையும் நாட்டில் தேர்தல் வன்முறைகளை பெருமளவில் தோற்றுவித்தமையும் தெரிந்ததே. எதிர்காலத்தில் உள்ளூராட்சிமன்றங்களுக்கு பிரதிநிதிகள் தொகுதிவாரியாகவும், விகிதாசாரமுறைப்படியும் தெரிவு செய்யப்படுவர் என்பதை புதிய முறைமை எடுத்தியம்புகிறது. மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின்படி 70% வீதமான பிரதிநிகள் வட்டாரமுறைப்படி நேரடியாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாவர், எஞ்சிய 30% வீதமானோர் விகிதாசாரமுறைப்படி பிரவேசிப்பர். இதன்மூலம் அந்தந்த பிரதேசங்களுக்கு தாங்கள் விரும்பியவர்களை நேரடியாக தெரிவுசெய்யும் வாய்ப்பை அந்தந்த பிரதேசமக்களுக்கு கிட்டுகின்றமை மாற்றங்காணும் வரலாற்று நிகழ்வாக சுட்டிக் காட்டப்படுகிறது.

எது எவ்வாறாயினும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு சவால்கள் ஏற்படலாம். விசேடமாக வாக்குகளுமின்றி தொட்டம் தொட்டமாக குறித்த உள்ளூருக்கு முடுக்கிவிடப்படவுள்ள கலப்புத் தேர்தல் முறை சிறுபான்மைக்கட்சிகளுக்கு அதிகம் கஷ்டத்தைக் கொடுக்கலாம்.

சிறுபான்மை கட்சிகளுக்கு மாத்திரமின்றி கம்மியூனிஸ்ட்கட்சி, ஜாதிக்க ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கும் சவாலாக அமையலாம். தமிழ்கூட்டமைப்பு, மு.கா, இ.தொ.கா போன்ற கட்சிகளும் தாங்கள் வாக்குகளால் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசங்களில் தொடர்ந்து ஆசனங்களை வெல்லக்கூடியதாக இருக்கும். ஆனால் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் வாழும் ஏனைய இடங்களில் குறிப்பாக குறைந்தளவான வாக்குகளுடன் சிறுபிரிவினராக இருக்கும் உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களில் ஆசனங்களை கைப்பற்றுவதுமான காரியமாகலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]