புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
முஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா?

முஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா?

மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்கிறார் ஹக்கீம்

கிழக்கு தேர்தல் மூலம் அம்பலம்

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என் பதே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம், தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணசபையில் சர்வகட்சி ஆட்சியை அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் பரிந்துரை செய்ததாகவும் இதற்கு ஏனைய எந்தத் தரப்பினரும் இணங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கைகளின் போது முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது தமிbழ விடுதலைப் புலிகளோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களின் நிலைமை குறித்து கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.