புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

பெருந்தோட்ட துறையில் சிறந்த மனிதவள அபிவிருத்திக்கு சீவரத்னத்துக்கு கெளரவம்

பெருந்தோட்ட துறையில் சிறந்த மனிதவள அபிவிருத்திக்கு சீவரத்னத்துக்கு கெளரவம்

வட்டவளை பிளான்டேஷன் கம்பனியில் முன்னெடுக்கப்படும் சிறந்த மனிதவள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக திட்டங்கள் போன்றவற்றுக்காக சர்வதேச ரீதியில் கெளரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பெருந்தோட்டத்துறையின் வளர்ச்சியிலும், சமூக நல அபிவிருத்தி திட்டங்களில் அக்கறை செலுத்தியமை போன்ற விடயங்களுக்காகவும், வட்டவளை பெருந்தோட்ட கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டான் சீவரத்னத்துக்கு ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான மனிதவள விருதுகள் வழங்கல் நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆசிய பசுபிக் பிராந்திய மனிதவள விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்றது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், வட்டவளை பெருந்தோட்ட கம்பனிக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்ததன் மூலம் இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்கு குறிப்பிடத்தக்களவு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறையில் பின்பற்றப்படும் சிறந்த மனிதவள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பல பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பெருந்தோட்ட கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டான் சீவரத்னம் செயலாற்றி வருகிறார். தொழிலகத்தை கட்டியெழுப்பியமைக்காக விருதையும் இவர் பெற்றுக்கொண்டார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பெருந்தோட்டத்துறை கம்பனியொன்று முதல் முறையாக இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், இந்தியா மலேசியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொண்டு, இந்த விருதை தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கண்டி செரின் தையல் பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. படத்தில் கலைநிகழ்ச்சியையும் பயிற்சி பெற்று டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களுடன் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்திய உதவித் தூதுவர் ஏ.நடராஜன், கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் செரின் தையல் பயிற்சி நிறுவன பணிப்பாளர் திருமதி ஷெரின் ரஞ்சித்குமார் வரவேற்புரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம். (படம்: நாவலப்பிட்டி தினகரன் நிருபர்)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.