புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
பங்களாதேஷிற்கு எதிராக முஸ்லிம் கவுன்ஸில் போர்க்கொடி

பெளத்த சமயத்திற்கு அகெளரவம்;

பங்களாதேஷிற்கு எதிராக முஸ்லிம் கவுன்ஸில் போர்க்கொடி

இஸ்லாத்திற்கு எதிரான செயலென கண்டனம்

பங்களாதேஷில் பெளத்த சமயத்தை அகெளரவப்படுத்தும் வகையில் இடம்பெற்ற சம்ப வங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். எந்த சமயத் தையும் இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது இஸ்லாத்திற்கு எதிரான செயலாகும்.

இவ்வாறு முஸ்லிம் கவுன்ஸில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதில் கவுன்ஸிலின் தலைவர் அல்-ஹாஜ் என்.எம்.அமீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கொழும்பு றண்முத்து ஹோட்டலில் இந்த செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. தொலைக்காட்சி நிறுவனங்கள் உட்பட பல ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, இந்த நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவே நாம் இங்கு பேசுகிறோம். இது சில விஷமிகளின் நடவடிக்கையாகும். இதற்கு பங்களாதேஷ் மக்களோ, உலகளாவிய முஸ்லிம்களோ எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது. இதற்கு எதிராக இந்த நாட்டு பெளத்த சகோதரர்கள் முன்னெடுக்கும் வன்முறையற்ற, அமைதிவழியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எமது முழு ஆதரவையும் தெரிவிக்கிறோம்.

இலங்கையில் முஸ்லிம்களையும் இஸ்லாத் தையும் அவமதிக்கும் வகையில் தவறாகப் பிரசாரம் செய்யும் 19 இணையத்தளங்கள் இயங்குகின்றன. இவற்றைத் தடைசெய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாக அமையாதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் தொடர்பில்லை. இவை இல்லாத விடயங்களை போலியாக இட்டுக்கட்டியே செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுகின்றன. இவை விஷமப் பிரச்சாரங்களே எனப் பதிலளிக்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.