நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
தேங்காய் உடைப்பு; நிதிசேகரிப்பு மக்கள் வாக்களித்தது இதற்காகவா?

தேங்காய் உடைப்பு; நிதிசேகரிப்பு மக்கள் வாக்களித்தது இதற்காகவா?

தீர்வு விடயத்தில் ஹினிதி யின் நிலைப்பாடுதான் என்ன?

இனப்பிரச்சினை தீர்விற்கு அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வருமாறு கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரு மான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இந்நாட்டில் இனப்பிரச்சினையை கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையின் மூலம் சரியான முறையில் தீர்த்து வைப்பார்கள் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். தமிழ் மக்கள் சரிசமமாக சகல உரிமைகளுடன் வாழ்வதற்கும், மீள்குடியேற்றங்கள் சரியான முறையில் இடம்பெறுவதற்கும், அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறுவதற்கும், யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் சீரமைக்கப்படுவதற்கும், வடகிழக்கில் பாடசாலைகளை கட்டியெழுப்பி கல்வி தராதரத்தை உயர்த்துவதற்கும் இவ்வாறான அனைத்து தமது தேவைகளை கூட்டமைப்பினர் நிறைவேற்றி வைப்பார்கள் என்ற நம்பிக்கையை வடகிழக்கு மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இது சம்பந்தமாக கூட்டமைப்பினர் எவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நிதி சேகரிப்பதோ அல்லது கோயில்களுக்குச் சென்று கைதிகளின் விடுதலைக்காக தேங்காய் உடைப்பதற்கோ மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று கூட்டமைப்பினர் மத்தியில் சில முரண்பாடுகள் எழுத்துள்ளமையை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. அதனை நாம்பெரிது படுத்த விரும்பவில்லை. ஆனால் இந்த முரண்பாடுகளுக்கு அடிப்படை காரணம் அவர்களது அரசியல் தெளிவின்¨ம்யே ஆகும். இனப்பிரச்சினை தீர்விலோ மக்கள் எதிர்பார்க்கும் ஏனைய விடயங்களிலோ இவர்கள் அக்கறை காட்டுவதில்லை. மாறாக அரசாங்கத்திற்கு சவால் விடுவதிலும் அதன் மூலம் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் புகழ் பெறுவதிலுமே இவர்கள் நாட்டம் கொள்கின்றனர். யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்களுக்கும் மேலாகியும் அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வில் அக்கறையும் இல்லாமல் இருக்கின்றது என்பது உண்மைதான். அதனை விமர்சிக்கும் நாங்கள் இனப்பிரச்சினை தீர்வில் எவ்விதமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்பதனையும் சிந்தித்து பார்க்கவேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]