புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
தனிநபரின் ஆசை வேட்கைக்கு பலியாகிறதா தமிழ்க் கூட்டமைப்பு!

வடக்கு முதலமைச்சர் கனவில் இருப்பவரின் காய்நகர்த்தல்?

தனிநபரின் ஆசை வேட்கைக்கு பலியாகிறதா தமிழ்க் கூட்டமைப்பு!

கூட்டமைப்பின் உட்கட்சி முரண் பாடுகளுக்கு ஒரேயொரு பிரதான காரணமே கூறப்படுகிறது. நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்காக தனக்குப் போட்டியாக எவரும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் முக்கியஸ்தரான முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் பக்குவமாகக் காய் நகர்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனக்குப் போட்டியாக வரக்கூடும் என நினைக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனை கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக உசுப்பிவிட்டு பதிவு, நிதி என கருத்து மோதலை ஏற்படுத்தினால் சுரேஷ் தனது கனவுக்கு எதிரான பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுவிடுவார் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதில் அவர் வெற்றியும் கண்டு வருகிறார்.

அவரது அடுத்த குறி மாவை சேனாதிராஜா. நிதி சேகரிப்பில் பாரிய ஊழல் என்று வெளியே தெரிய வராதிருந்த உண்மையான குற்றச்சாட்டை சுரேஷ் மூலமாகவே முன்வைத்து அதிலும் அருமையாகக் காய் நகர்த்தி வருகிறார். அதனால் மாவையும் விரைவில் அவுட் ஆகிவிடுவார்.

தற்போது சிறிதரன் எம்.பிக்கும் முதலமைச்சராகும் எண்ணம் இருப்பதாக இவர் தனது உளவாளிகள் மூலமாக அறிந்துள்ளதால் அவர் மீதும் இணையக் குற்றச்சாட்டு, அவரது உதவி நிறுவன நிதி தொடர்பான விடயங்களை சுரேஷ் மூலமாகவே முன்வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். விரைவில் அவரும் அவுட்.

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து எவராவது முயற்சி செய்தால் அதற்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையே இன்று கூட்டமைப்பின் முன்னாலுள்ள பாரிய பிரச்சினையாகும். தனிநபர் ஒருவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ்க் கூட்டமைப்பை அழிக்க முயல்வதை பல தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிந்திருந்தும் மெளனமாக இருப்பதன் மர்மம்தான் புரியாத புதிராக உள் ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.