புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* மலையகத்தையும் சீர்குலைக்க ஊடுருவும் முயற்சி முறியடிப்பு?

யாழ்ப்பாணத்து சிறு பத்திரிகையின் மரண அறிவித்தல் விளம்பரம் மூலமான வருமானத்தில் கொழும்பிலும் பெயருக்கு ஒரு பத்திரிகையடித்து தமது கற்பனைச் செய்திகளால் தமிழ் மக்களுக்கு கிடைப்ப தையும் கிடைக்க விடாது தடுத்து வரும் ஒரு குழுவினர் இப்போது அமைதியாக இருக்கும் மலையகத்திற்குள்ளும் ஊடுருவி மக்களைப் பிரித்தாளும் வேலையைக் காட்ட முற்பட்டுள்ளனராம். வாரமஞ்சரி வாசகர் வட்ட பிரமுகர் களை அழைத்து தமிழுணர்வு ஊட்டி மூளைச்சலவை செய்து தமது பத்திரிகைக்கு ஆதரவு வழங்குமாறு கேட் கின்றனராம். எங்கட தலைவர் தம்பியை அவமானப்ப டுத்தி அவர் கொக்கேயின் பாவிப்பதாக அவதூறு செய்தது மட்டுமல்லாது எங்கட மலையகத் தலைவர்மாரை மோத விட்டு வேடிக்கை பார்க்கும் உங்கட பத்திரிகை இங்கை தேவையில்லையென விரட்டியடிக்க ஓடித்தப்பி வந்துவிட் டனராம். உங்கட பேப்பரை பழைய பேப்பருக்கும் எங்கட பகுதியில் வாங்க மாட்டோம் என்று முகத்திலடித்துக் கூறிக் கலைத்துவிட்டார்களாம் மலையகத்துச் சிங்கங்கள்.

* முஸ்லிம் மக்கள் மீது திடீரெனத் தோன்றிய ஒருதலைக் காதல்

தள்ளாத வயதிலிருக்கும் சம்பந்தன் ஐயா முதல் வடக் குக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தும் இளைஞர் மனோ கணேசன் வரையான தமிழ்த் தலைவர்களுக்கு முஸ்லிம் மக்கள் மீது திடீரென ஓர் ஒருதலைக் காதல் ஏற்பட் டுள்ளது. தமது காதல் கடிதங்களை அறிக்கைகளாக தமக்குச் சார்பான பத்திரிகைகளில் வெளியிட்டு வருகின் றனர். இது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. சம்பந் தன் ஐயா இந்தியா சென்று மன்மோகன் சிங்குடன் முஸ் லிம் மக்கள் பற்றியும் பேசப்போகிறாராம், தீர்வில் அந்த மக்களுக்கு குறைவில்லாது வழங்க வேண்டும் என்று மனோ சொல்கிறார். அந்த மக்களை யார் கை விட்டாலும் தமிழ்க் கூட்டமைப்பு கை விடாது என்று சம்பந்தன் ஐயா ஒரு போடு போட்டிருக்கிறார். இவையை நம்பின தமிழ்ச் சனம் நடுத்தெருவிலும், நடுக்கடலிலும் நிற்குது. இவையோ முஸ்லிம்களுக்கு உதவப் போகினமாம். அதற்கு அவையின்ர பலமான கட்சிகள், தலைவர்கள் இருக்கிறார்கள். முதலில் தமிழ்க் கூட்டமைப்பிற்குள் தான் நின்று பிடிப்பதை சம்பந்தன் ஐயா உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை அதற்குத்தான் இந்த மக்களை உதவிக்கு அழைக்கிறாரோ?

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.