நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
சினி பஜார்

எஸ்.எம்.பாரூக், மாவனல்ல

கேள்வி: மக்கள் திலகம் படங்களை இயக்கியதைப்போல் அவரது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி ஏதாவது படங்களை இயக்கியுள்ளாரா?

பதில்: ஆமாம் அரச கட்டளை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்.கே.புதாரி, கல்முனை

கேள்வி: சினி ஜோக் ஒன்று சொல்லுங்களேன் பார்ப்போம்?

பதில்: “டைரக்டர் சார் இன்னிக்கு ரிலீஸான நம்ம படத்தைப் பார்த்துட்டு ஒரு டாக்டர் பாராட்டிப் பேசினார்”

“என்ன பேசினார்?”

“அவரு மனநல டாக்டராம் உங்க படத்தைப் பார்த்துட்டு நிறைய பேஷண்ட் எனக்கு வாறாங்க. நன்றி” ன்னு சொன்னாரு.

எம்.வதனி, வவுனியா

கேள்வி: இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ் முதன் முதலில் இசையமைத்த படம் எது என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

பதில்: இது தொடர்பாக கணேஷ் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். 1964ல் கவிஞர் கண்ணதாசன் தன் நண்பர்கள் தயாரித்த நகரத்தில் திருடர்கள் என்ற படத்தில் எங்களை அறிமுகம் செய்து வைத்தார். ஜெயசங்கர் நடித்த அந்தப்படம் பாதியில் நின்ற போது அடுத்து “நான் யார் தெரியுமா” என்ற படத்திற்கு கவிஞர் எங்களை சிபாரிசு செய்தார். அதுவும் பாதியில் நின்று போனது. இதற்குப் பிறகு தேவர் தயாரித்த ‘மகராசி’ என்ற படத்திற்கு அறிமுகம் செய்தார். அந்த நன்றிக்காகத்தான் கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் என்று டைட்டில் போட்டுக்கொண்டோம். என்று சொல்லுகிறார் இரட்டையர்களில் இப்போது உயிருடன் இருக்கும் கணேஷ்.

என். கே.மாதவன், புத்தளம்

கேள்வி: இன்றைய திகதியில் ஏறுமுகத்தில் இருக்கும் நடிகை யார்?

பதில்: அஞ்சலிதான். சின்னபட்ஜட் பெரிய பட்ஜட் என்ற பாகுபாடு பார்க்காமல் இறங்கி அடிக்கிறார். அவர் கையில் இப்போது ஏகப்பட்ட படங்கள். அதுவும் போதாது என்று விளம்பர பக்கமும் பணம் பார்க்கிறார். அஞ்சலி காற்றுள்ள போதே தூற்றிக் கொள்....

என்.எம்.சோமு, வத்தளை.

கேள்வி: என்ன வர்ஷினி இது.... புதிய படம் ஒன்றில் நடிக்க ரஜினிக்கு 240 கோடி கொடுத்திருக்கிறார்களாமே உண்மையா இது?

பதில்: உண்மைதான். விரைவில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புதுப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் வெளியிட்ட செய்தியால் ஊடக உலகம் பரபரத்து கிடக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன் அதற்கு முன்பு சிவாஜி. வசூலில் பல சாதனைகள் படைத்தது. இந்த நிலையில் இதுவரையில் இந்திய சினிமாவில் யாரும் கேட்டிராத பெரும் தொகையான ரூ.240 கோடியை சம்பளமாகத் தர சக்சேனா முன் வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் ரஜினியை சந்தித்த ராம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, தனக்கு 30 நாட்கள் மட்டும் கால்iட் தந்தால் போதும் ஒரு புதிய மெகா பட்ஜட் படத்தை உருவாக்கிவிடுவேன் என்று கூறினாராம்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க தெலுங்கில் முதல்தர நடிகர் ராம் சரண் தேஜாவை நடிக்க வைக்கத் திட்டமாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]