புத் 64 இல. 40

நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20

SUNDAY OCTOBER 07 2012

 

ஜPவாவின் யான்

ஜPவாவின் யான்

விண்ணைத்தாண்டி வருவாயா, கோ போன்ற வெற்றிப்படங்களைத் தயாரித்த நிறுவனம் ஆர்.எஸ் இன்போடைமன்ட். இந்நிறுவனம் தற்போது புதிதாக தயாரிக்கும் படம் “யான்”.

நாயகனாக நடிகர் ஜPவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மணிரத்னம் இயக்கும் கடல் மூலம் அறிமுகமாகும் துளசி (நடிகை ராதாவின் இளைய மகள்) நடிக்கவுள்ளார்.நாசர், பிரகாஷ்ராஜ் , தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

கதையுடன் ஒட்டி வரும் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் பிரேம்ஜp அமரன் நடிக்க, நடிகர் ஸ்ரீஹரி (டிஸ்கோ சாந்தியின் கணவர்) இதுவரை ஏற்றிராத மிக வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ளார்.

கோ படத்தின் இனிமையான பாடல்கள் மூலம் ரசிகைகளை கவர்ந்த ஹரிஸ் nஜயராஜ் - ஆர்.எஸ் இன்போடைமன்ட் வெற்றி கூட்டணி இப்படத்திலும் தொடர்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.