நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
களத்தில் பக்ரு

மற்றொரு கின்னஸ் சாதனைக்காக

களத்தில் பக்ரு

தமிழில் டிஷ்யு+ம் உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நகைச்சுவை நடிகர் பக்ரு.

70 சென்டி மீற்றர் உயரம் கொண்ட பக்ரு அற்புதத் தீவு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

இதற்காக 2008ஆம் ஆண்டு உயரம் குறைவான கதாநாயகன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள பக்ரு தற்போது அடுத்த சாதனைக்கு தயாராகி உள்ளார்.

அதாவது குழந்தைகளுக்கான நகைச்சுவை படமான குட்டியும் கோலும் என்ற படத்தை இயக்கவிருப்பதன் மூலம், உலகின் உயரம் குறைந்த இயக்குநர் என்ற சாதனையை படைக்கவிருக்கிறார். இப்படத்தில் குட்டியாக பக்ரு நடிக்கிறார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]