நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
நாசரை இலங்கை தமிழ் பேசவைத்த தீபச்செல்வன்

நாசரை இலங்கை தமிழ் பேசவைத்த தீபச்செல்வன்

விக்கிரம் - அனுஷ்கா நடிக்கும் படம் தாண்டவம். இந்தப் படத்தை மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் முதலிய படங்களை இயக்கிய ஏ.எல். விஜய் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் நாசர் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழராக நடிக்கின்றார். லண்டனில் உளவுத்துறை உயர் அதிகாரியாக முக்கிய பாத்திரம்.

இதில் நாசர் இலங்கைத் தமிழை சரளமாகப் பேசியிருக்கிறார். சரியாகப் பேச வைக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர் விஜய், ஈழக் கவிஞர் தீபச்செல்வனை அழைத்திருக்கிறார். தீபச்செல்வன் நாசருக்கு எவ்வாறு இலங்கைத் தமிழை உச்சரிக்க வேண்டுமென சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

டப்பிங் முழுவதும் தீபச்செல்வன் இருந்து நாசருக்கு வார்த்தைக்கு வார்த்தை ஈழத் தமிழை சொல்லிக் கொடுத்திருக்கிறார். சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நுணுக்கமாகக் கேட்டு படம் முழுக்கப் பேசினாராம் நாசர்.

இலங்கைத் தழிழர்கள் பேசுவது போல மிகவும் சரளமாக இந்தப் படத்தில் நாசர் பேசி யிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]