நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
இந்திய வம்சாவளி இளைஞர்களுக்கு இலவச இந்தியா சுற்றுலா வாய்ப்பு

இந்திய வம்சாவளி இளைஞர்களுக்கு இலவச இந்தியா சுற்றுலா வாய்ப்பு

இந்தியாவை அறிந்துகொள்ளும் நிகழ்ச்சித்திட்டம்

வெளிநாடுகளில் வாழும் 25 மில்லியன் இந்தியர்களில் கணிசமானவர்கள் இளைஞர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். இந்தியாவின் பழமையான கலாசார, மரபுகள் இன்று தொழில் மற்றும் வர்த்தக விஞ்ஞான தொழினுட்ப துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் என்பன பற்றி வெளிநாட்டில் வாழும் இளைஞர்களுக்கு போதிய புரிந்துணர்வுகள் இல்லை. இந்தியா பற்றிய அனுபவமும் மிகக் குறைவு, இப்படிப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு பயன் தரும் முறையில் இந்தியாவை அறிந்து கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தை இந்தியாவின் வெளிநாட்டுவாழ் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள். இதுவரை இந்தியாவை அறிந்துகொள்க என்ற இத்திட்டம் 21 தடவை நிறைவேற்றப்பட்டு 659 வெளிநாட்டு வாழ் இளைஞர்கள் பங்குபற்றி உள்ளனர். இருவர் மட்டுமே இலங்கையில் இருந்து கலந்து கொண்டுள்ளனர். பொருளாதாரம், கைத்தொழில், கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் கலாசாரம் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய அடைந்திருக்கும் வளர்ச்சியையும் இந்தியாவின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்துமுகமாக வெளிநாடுகளில் வாழும் இளைஞர்களுக்கான மூன்றுவார கால அறிமுகத்திட்டம் இதுவாகும். இந்திய வம்சாவளியினரான மாணவர்கள் மற்றும் துறைசார் இளைஞர்களை இந்தியாவுக்கு வரவழைப்பதும் இன்றைய இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதோடு தமது எதிர்பார்ப்புக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும் இந்தத்திட்டம் ஒரு தளமாக அமைகின்றது. கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் வழங்கும் சிபாரிசுகளின் அடிப்படையில் ஒவ்வொரு நிகழ்ச்சித்திட்டத்திலும் 18-26 வயதுக்குட்பட்ட இந்திய வம்சாவளி இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந் நிகழ்ச்சித்திட்டம் முடிவடையும் வரை அவர்கள் இந்தியாவில் இந்தி விருந்தோம்பலை முற்றிலம் அனுபவிக்கிறார்கள். கலந்து கொள்ளும் பேராளர்களுக்கு விமானக்கட்டணத்தில் 90% சதவீதம் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படுகின்றது.

23 ஆவது நிகழ்ச்சித்திட்டம் டிசம்பர் 21.2012 ஜனவரி 10,2013 வரை இடம்பெறும். இச்செயற்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் பட்டதாரிகளாக அல்லது பட்டதாரி மாணவர்களாக இருத்தல் வேண்டும். ஆங்கில மொழியில் உரையாடக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இதுவரை இந்தியா செல்லாதவர்களாக இருக்கவேண்டும்.

இந்தியர்களின் வாழ்க்கைசெல் நெறிகள் பல்வேறுதுறைகளில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி என்பன தொடர்பான விரிவுரைகள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி நிறுவனம் சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை சந்தித்துப் பழகுவதற்கான வாய்ப்பு, இந்தியாவின் கைத்தொழில் தொடர்பான அறிமுகம், சில கைத்தொழில் நிறுவனங்களுக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பும் இந்திய கிராம வாழ்க்கையை அறியும் வகையில் ஒரு கிராமத்துக்கு விஜயம் செய்தல் இந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் உடனான சந்திப்பும், ஊடக நிறுவனங்களுக்கு விஜயம் செய்தலும் அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் மகளிர் மன்றங்களுடன் உறவாடும் வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், புராதான சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை பார்வையிடுதல், யோகாசனம் பற்றிய அறிமுகம், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, அமைச்சர் வயலார் ரவி, வெளிநாட்டு வாழ் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சின் அதிகாரிகள், கணக்காளர் நாயகம், பிரதம தேர்தல் ஆணையாளர் மற்றும் உயர்மட்ட பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு என்பன இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.mola.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து இம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய தூதரக கொன்சியுலர் பிரிவில் சமர்ப்பிக்கவும்.

காயத்திரி விக்கிரமசிங்க...


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]