நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
சாணக்கியனிடம் கேளுங்கள்

எஸ்.சிவநேசன், ஆரையம்பதி

தமிழ் மக்களுக்கு அவர்கள் ஏற்கும் நிலைத்து நிற்கக் கூடிய நிலையான தீர்வொன்றைப் பெற்றுத் தாருங்கள் என்று சர்வதேசத்திடம் சம்பந்தன் ஐயா கேட்டிருக்கிறாரே? இது நடைபெறக் கூடிய ஒன்றா?

அவர் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே அவர் எதிர்பார்ப்பதை விடவும் எல்லாம் நடைபெறுகிறது. முதலில் வடக்கு கிழக்கு மக்களுக்காக என்று கேட்டார். இனி கிழக்குப் பற்றி கதைக்க முடியாது. அங்கு மக்கள் வழங்கிய ஆணைப்படி ஆட்சி ஆரம்பமாகி விட்டது. அடுத்த வருடம் வடக்கிலும் தேர்தல் நடந்தால் பின்னர் எந்தப் பகுதித் தமிழருக்காக சம்பந்தன் ஐயா தீர்வைக் கேட்கப் போகிறாரோ தெரியாது. முடிந்தால் வடக்கையாவது தக்க வைத்து அவரது மிகுதிக் காலத்தைக் கழித்துவிடட்டும்.

முஹம்மத் நkர் அஹமட், வெல்லம்பிட்டிய

அஸாத் சாலி ஐயாவின் ஆக்ரோசமான பேச்சுக்களை இப்போது காணமுடியாதுள்ளது. காரணம் என்ன? அவர் மீண்டும் கொழும்பு மாநகர சபையில் இணைந்து கொள்ளப்போவதாகவும் ஒரு கதை அடிபடுகிறது. உண்மையா?

வாயைக் கொடுத்து பேயை வாங்கிக் கொண்டவர் அவர். இப்பதான் அதுகளை மறந்துபோய் மெளனமாக இருக்கிறார். ஏன் அவரை மீண்டும் வம்பிற்கு இழுக்கிaர்கள். மு.காவில் தலைவர் முதல் சிறு தொண்டன் வரை இவரை பெயர் சொல்லித் தாக்கியுள்ளனர். மனுஷன் நொந்து நூலாகிவிட்டார். கொழும்பு மாநகர சபையில் இணைய வாய்ப்புண்டு. அவர் இராஜினாமாச் செய்வது போல் செய்து, செய்யாமலேயே கிழக்கிற்குச் சென்றதாகக் கேள்வி. எதனையும் உறுதிப்படுத்தாமல் கதைப்பது தவறு என்பது எனது கொள்கை.

க.சிவரூபன், கொழும்பு - 14,

அண்மைக் காலமாக அலுவலகங்களில் அதிகமாகத் தூங்குபவர்கள் அதாவது நித்திரை கொள்பவர்கள் தொகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதே. இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்னவோ?

உங்களது அலுவலகத்தில் அப்படியென் பதற்காக எல்லா அலுவலகங்களையும் துணைக்கு அழைப்பது தவறு சிவரூபன். அதிகநேரம் நித்திரை கொண்டால் நீரிழிவு நோய்த் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்று ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். சிலவேளை நீங்கள் கூறுவது உண்மையாயின் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அலுவலகத்தை விடவும் வீட்டில்தான் பலருக்கு வேலைப்பளு அதிகம். அதனால் ஓய்வு எடுக்கச் சிலருக்கு அலுவலகம் சிறந்த இடமாகலாம்.

பாத்திமா நஸ்ரியா, புத்தளம்,

இங்கிலாந்தில் வடக்கு வேல்ஸ் பகுதியில் தாம் வளர்த்த செல்லப் பிராணிகளான நாய்களைக் காப்பாற்றப் போய் இளம் காதல் ஜோடி ஒன்று வெள்ளத்திற்குப் பலியாகி விட்டதாமே? எமது நாட்டிலும் இப்படியானவர்கள் உள்ளனரா?

வெள்ளத்தில் மனிதர் அடித்துச் செல்லப்பட்டாலே வேடிக்கை பார்க்கிற எங்கட மக்களின்ர உணர்வு எங்கே? வாயில்லாப் பிராணிகளுக்காக உயிர்நீத்த அவர்கள் எங்கே? எங்கட நாட்டில் சுனாமி வந்து கடல் அலை மக்களை இழுத்துச் சென்றபோது கூட உயிருக்குப் போராடிய பெண்களோடு அந்த நேரத்திலும் சில்மிஷம் செய்த, நகைகளை அறுத்துவிட்டு தள்ளிவிட்ட நம்மவர்களின் எத்தனை கதைகளைக் கேட்டிருக்கிறோம். அதுகள் தெரிந்திருந்தும் இப்படியொரு கேள்வியைக் கேட்க உமக்கு எப்படி மனம் வந்தது பாத்திமா?

குழந்தைவேலு வேலுசாமி, பொகவந்தலாவை

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற பெங்களூர் ஸ்ரீ ரவிசங்கர சுவாமிகளது கோரிக்கைக்கு மனோ கணேசன் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறாரே? காரணம் என்னவாக இருக்கும்?

சுவாமி தெரிவித்தது நல்ல எண்ணத்தினால் இருக்கலாம். ஆனால் மனோ தெரிவித்தது அரசியல் எண்ணத்தில்தான் என்பது நிச்சயம். ஆனாலும் மனோ, இப்போது நாட்டில் யுத்தம் இல்லை, சமாதானம் நிலவுகிறது, இனி இவர்கள் பயமில்லாது நாடு திரும்பலாம் என்ற உண்மையைக் கூறாது தனது ஒரு லட்சத்து மூன்றாவது அறிக்கைக்கு வலுச் சேர்க்க பொய்யான கருத்துக்களைத் தனது பாணியில் முன்வைப்பதுதான் ஏற்றுக்கொள்ள மனதிற்குக் கஷ்டமாக உள்ளது. இருந்தாலும் அவரது ஒருசில அறிக்கைகள் ஒருசில சந்தர்ப்பங்களில் வேலையும் செய்திருக்கிறது.

ந.செல்வவடிவேலன், நீர்கொழும்பு

எடுத்ததற்கெல்லாம் அறிக்கைவிடும் அரசியலை கைவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கேட்டுள்ளார். அவரோ நிறுத்த முடியாது எனக்கூறி அதற்கும் ஓர் எதிர் அறிக்கை விட்டிருக்கிறார்? இது எதில் போய் முடியப் போகிறது?

பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் கலைஞர் கருணாநிதியும் அறிக்கையும் என்று சிறு குழந்தையும் இலகுவாகக் கூறிவிடும். அவரது அறிக்கை மக்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தினாலும் அவருக்கு அரசியல் வாழ்வளித்துக்கொண்டிருக்கிறது. அவரை அறிக்கையை நிறுத்துமாறு கோருவது அவரைத் தற்கொலை செய்து கொள்ளுமாறு கோருவதற்குச் சமனானது என்றால் பாருங்களேன். வெளிநாட்டு விடயங்கள் தெரிந்த உமக்கு எமது உள்நாட்டில் அறிக்கை விடுபவர்கள் பற்றித் தெரியவில்லையே.

ப.காண்டீபன், கனடா

தமிழ் மக்களது நம்பிக்கையை இழக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் உள்ளதாக இதுவரை காலமும் அவர்களுக்குச் சார்பாக எழுதியவர்கள் கட்டுரை எழுதியுள்ளார்களே?

உதைத்தானே வாரமஞ்சரி இரண்டரை வருடத்திற்கு முன்பாகவிருந்தே கூறி வருகிறது. அரச பத்திரிகை தமிழ்க் கூட்டமைப்பை பிரிக்கச் சதி செய்கிறது என்று அன்று கூப்பாடு போட்டார்கள். இன்று அது தானே உண்மையில் நடக்கிறது. நாங்கள் அரச பத்திரிகை என்றாலும் தமிழர் நலனில் அக்கறை இருந்தபடியால்தான் எச்சரிக்கை விடுத்தோம். இனி காலம் கடந்து ஞானம்

சாணக்கியனிடம் கேளுங்கள்
வாரமஞ்சரி தினகரன்
லேக்ஹவுஸ்
கொழும்பு-10


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]