நந்தன வருடம் புரட்டாதி மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 துல்கஃதா பிறை 20
SUNDAY OCTOBER 07, 2012

Print

 
சிக்கினர் கஹவத்தை கொலை சு+த்திரதாரிகள்

சிக்கினர் கஹவத்தை கொலை சு+த்திரதாரிகள்

இரத்தினபுரி கஹவத்தை உள்ளிட்ட இதர இடங்களில் இடம்பெற்ற கொலைகளின் சூத்திரதாரியான நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். ஐந்து வருடகாலத்தில் பதினான்கு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைத் தொடரில் இறுதியாக இறந்தவர்கள்தான் தாயும் மகளுமாகும்.

2012ம் ஆண்டு ஜுலை மாதம் பத்தொன்பதாம் திகதி வியாழக்கிழமை அறுபத்தைந்து வயதுடைய யு.டி. பிரேமவதி, முப்பத்துமூன்று வயதுடைய இவரது மகள் எச்.ஜி. புஷ்பகுமாரி ஆகியோர் கொமகெதன என்ற இடத்திலுள்ள வீட்டில் எரித்து கொலை செய்யப்பட்டனர். இவ்விரட்டை கொலை சம்பந்தமாக சந்தேக நபர்கள் நால்வரை 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதி திங்கட்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பெரிய கத்தியும் கண்டெடுக்கப்பட்டது. ஒரு இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மாணிக்ககல் அகழ்பவர், தேங்காய் பறிப்பவர், முச்சக்கரவண்டி, வர்ணம் தீட்டுபவர், தொழிலாளி ஆகியோரே சந்தேகநபரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டை கொலை நடைபெற்ற நாட்களில் இரகசிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தேங்காய் பறிப்பவரைக் கைது செய்து விசாரணையின் பின் விடுவித்துள்ளனர். மீண்டும் இவரை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணசெய்ததில் கொலை பற்றிய விபரங்கள் வெளியானதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். சந்தேகநபர் தனக்குப் பேய் பிடித்ததுபோல நடித்து இறந்த தாயினது மகனின் மனைவியே இக்கொலைகளை செய்ததாக கூறி நடித்தது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இறந்த புஷ்பகுமாரி முப்பத்துமூன்று வயதுடையவர் திருமணம் முடிக்காத இவர் கஹவத்தை வர்த்தக நிலையமொன்றில் தொழில் புரிந்தவர். வீட்டில் தாயும் மகளும் வாழ்ந்துள்ளனர். தற்போது குருவிட்ட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொலைகளுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பதாக செய்து கொண்ட ஒப்பந்தத்தையடுத்து தேங்காய் பறிப்பவரும், முச்சக்கரவண்டி, வர்ணம் தீட்டுபவரும் கடந்த ஜூலை மாதம் பத்தொன்பதாம் திகதி நள்ளிரவு பன்னிரெண்டரை மணியளவில் வீட்டுக்கு சென்று தாயையும் மகளையும் கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தாயும் மகளும் இவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபரான தேங்காய் பறிப்பவர் தன் மனைவி சுகயீனமாயிருப்பதாகவும் பணம் உதவிசெய்யும்படி வேண்டவே முன்கதவு திறக்கப்பட்டதும் சந்தேக நபர்கள் உள்ளே நுழைந்து முதலில் தாயை கொன்றதாகவும் இதனை கண்ட மகள் சப்தமிட்டு ஓடி வருகையில் அவளும் கத்தியினால் குத்தப்பட்டும் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்படும் முன் முச்சக்கரவண்டி வர்ணம் தீட்டுபவர் சடலங்களின் மேல் கட்டில், பலகை, தலையணைகளை வைத்து தினர் ஊற்றி எரித்ததாக விசாரணையின்போது சந்தேக நபர்கள் தெரிவித்தனர். வல்லுறவுக்குட்படுத்தி இருவரையும் மூவரும் கொலை செய்தபோது பிறர் அங்கு வராது கண்காணித்தவர் மாணிக்ககல் அகழ்பவரென பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை திசை திருப்புவதற்காக சந்தேக நபர்கள் ஜன்னல் கம்பிகளை அகற்றியுள்ளனர். ஜன்னலினூடாக வீட்டினுள் புகுந்துள்ளதாகக் காட்டுவதற்காகவே பொலிஸார் தெரிவித்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பாரிய கத்தியைதேங்காய் பறிப்பவர் தன் தொழிலுக்கு உபயோகிப்பதாகவும், சம்பவத்தின் பின் மற்ற சந்தேக நபரான தொழிலாளி இக்கத்தியை வனப்பகுதியில் எறிந்ததாகவும் இதனைத்§டி கண்டு பிடித்த தேங்காய் பறிப்பவர் கத்தியை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் அதனை தன் தொழிலுக்கு உபயோகிப்பதாகவும், எரியும் வீட்டையும் தாய், மகள் இவருவரையும் காப்பாற்ற சந்தேக நபர் ஊர்மக்களுடன் சேர்ந்து உதவியுள்ளாரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

2007ம் ஆண்டு ஜூலை மாதம் இருபத்தாறாம் திகதி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஐம்பத்தாறு வயதுடைய செல்லையா மாரியா என்ற பெண்ணுடன் ஆரம்பமான கஹவத்தை, கொடகெதன கொலை தொடர் 2012ம் ஆண்டு ஜனவரிமாதம் முப்பத்தொறாம் திகதி செவ்வாய்க்கிழமை இரட்டை கொலைகளாக மாறியது. இதேயாண்டு மேமாதம் முப்பத்தொறாம் திகதி வியாழக்கிழமை திருமணம் செய்யாத, திருமணம் முடித்து கணவரை இழந்த இருபெண்கள் கொலைசெய்யப்பட்டனர். இவர்கள் அக்காவும் தங்கையுமாவார். இதையடுத்து ஜூலைமாதம் பத்தொன்பதாம் திகதி வியாழக்கிழமை தாயும் மகளும் கொலை செய்யப்பட்டனர்.

கடந்த ஐந்து வருடங்களில் கஹவத்தை பிரதேசத்தில் பதினான்கு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க, கொழும்பு குற்ற பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர, உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் வெதசிங்க, குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஹேமன்த திக்ஹோவிட, பொலிஸ் பரிசோதகர்களான நாலக குணசேகர, பிரேமலால் ஹெட்டியாராச்சி. ஜனககுலரத்ன, உப பொலிஸ் பரிசோதகர் அஜித் மெத்தானந்த, ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]